வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Thursday 23 February 2012

கோவை அன்சாரியின் சிறை நினைவுகள்....

கோவை அன்சாரியின்  சிறை நினைவுகள்....


பிப்ரவரி 14 ஆம் தேதியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள் மத்தியில் நானும் என்னோடு சிறையில் இருக்கும் சகோதரர்களும்  இந்த நாள் வந்தவுடன் வருத்தம் அடைந்தோம். காதலர் தினத்துக்காக இல்லை, எங்களின் சிறை வாழ்க்கைக்காக.
ஆம், இன்று எங்களின் சிறை வாழ்க்கைக்கு வயது 14 . பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இதே நாளில்தான் நானும் என் சகோதரர்களும் கைது செய்யப்பட்டோம். ஹிந்துத்வா தீவிரவாதி அத்வானி கோவை வந்தபோது நடந்த குண்டுவெடிப்பை காரணம் காட்டி நாங்கள் எல்லாம் அள்ளி செல்லப்பட்டோம். இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைது வேட்டை என்ற தலைப்பை வெளியிட்ட தினமலரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனேயே கையில் கிடைத்த முஸ்லிம்களை எல்லாம் வாரி சென்றது காவல் துறை (மன்னிக்கவும்) காவித்துறை. பதறிய சொந்தங்களும் கதறிய குழந்தைகளும் எங்களை வந்து காண கூட இந்த பாவிகள் அனுமதிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நாங்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. என் சகோதரர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் வீடு புகுந்து பெண்கள் என்னும் பாராமல் அவர்களை கீழே தள்ளி மிதித்து சென்ற முரட்டு பாவிகள் இவர்கள்.
குண்டு வெடிப்பில் 58 பேர் இறந்துபோனதாக பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள் நவம்பர் கலவரத்தில் மாண்டவர்களை மறந்து போனார்கள். 19 முஸ்லிம்கள் காவல் துறையாலும், காவி பயங்கரவாதிகளாலும் கொல்லப்பட்டபோது இவர்களின் பேனா நுனிகள் எழுதிட முன்வரவில்லை. ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நாட்டின் முக்கிய மூன்று தூண்களில் இந்த பத்திரிக்கயாலர்கலும் ஒரு பிரிவினர் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எனக்கும், இன்னும் சில சகோதரர்களுக்கும் சிறைவாசம் பற்றிய அனுபவம் கொஞ்சமாவது இருந்தது.
ஏனென்றால், தடா வழக்கிலே நாங்கள் ஏறத்தாள மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறோம். ஆனால் பதினைந்து வயதுடைய சிறுவர்களையெல்லாம் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்தபோது என் இதயம் வெடித்தே போனது. எந்த ஒரு முஸ்லிமும் வாய் திறந்தாலே கைது செய்யப்படும் நிலை இருந்ததினால் முன்வந்து பேசிட யாருக்கும் திராணி இல்லை. முந்தைய மூன்று ஆண்டுகள் எங்களின் சிறை வாழ்க்கை நரகமாகவே மாறிப்போனது. பாசிச ஹிந்துத்வா சக்திகள் ஆட்சி கட்டிலில் இருந்ததினால் அவர்கள் நினைத்ததெல்லாம் செய்தார்கள். சிறை வார்டன்கள் மாற்றப்பட்டு பாசிச சிந்தனையுள்ள தீவிரவாதிகள், காவலர்கள் என்ற பெயரில் சிறையினுள் நுழைந்தார்கள். மறைந்த ரங்கராஜ குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்தபொழுது இதை முழு மூச்சுடன் செய்தார் என்ற செய்தியை நாங்கள் பிற்காலங்களில் அறிந்தோம்.
இன்றைய குவாண்டனாமோ சிறையை அன்றே சந்தித்தவர்கள் நாங்கள். பட்ட துன்பத்தையும் துயரத்தையும் இங்கு வார்த்தைகளில் சொல்லிட இயலாது. காவல்துறை காவித்துரையாகவே மாறிப்போனது.
எங்கள் ஒவ்வொருவரையும் பத்து பேர் கொண்ட காவல்துறை ஒரு அறைக்கு அழைத்து செல்வார்கள். மயக்கமுறும் அளவிற்கும், லத்தி உடையும் அளவிற்கும் அடிப்பார்கள். மயக்கமுற்ற உடனே எங்களை கொண்டுவந்து எங்கள் அறையில் போட்டுவிட்டு மற்ற சகோதரனை தூக்கி செல்வார்கள். தொழக்கூட எங்களால் எழுந்து நிற்க முடியாத நிலை. பலமுறை நாங்கள் நிருவானப்படுத்தப்பட்டோம். பலமுறை நாங்கள் கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டோம். தலைகீழாக தொங்குவதின் காரணத்தால் எங்கள் தலையில் ரத்தம் சூடேறி கண்களெல்லாம் இருண்டு போகும்.தொழுகை நடக்கும் இடத்தில் சிறுநீர் கழித்த பாவிகளும் உண்டு.
அறையின் வாசலில் மனித மலத்தை கொட்டி இரவு முழுக்க நாற்றத்தினால் தொலைந்த தூக்கங்கள் எத்தனை. இன்னும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்த எங்களின் இருதயத்தை இன்றும் தடவி கொடுக்கும் மயில் இறகாக இருப்பது தக்வா மட்டுமே. போராட்டம் என்பது இனி எங்களுக்கு புதிதல்ல. இன்னும் எத்தனையோ கொடுமைகளை இங்கே எழுதிடலாம் ஆனால் அவற்றினால் உங்கள் மனது புண்பட்டுவிடுமோ என்று ஐயப்படுகிறேன். அந்த நாட்களை நினைத்து பார்த்தேன், அதில் சிலதை உங்கள் மத்தியில் பகிர்ந்திட ஆசைப்பட்டேன்.
அன்பு சகோதரர்களே, நாங்கள் அடைந்த துன்பங்களையெல்லாம் உங்களிடத்தில் சொல்லி உங்களையும் துன்பப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கோ என்னோடு மீதமுள்ள சிறைவாசிகளுக்கோ இல்லை, ஆனால் எங்களின் வலியை எடுத்து சொன்னால் நீங்கள் மறக்காமல் உங்கள் தொழுகையில் துவா செய்வீர்கள் என்ற எண்ணமே என்னை இங்கே எழுதிட வைத்தது.
எங்களின் பிணைக்காக உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். வரும் 24 ஆம் தேதி தீர்ப்பு தருவதாக கூறியுள்ளார்கள். நல்ல செய்தி கிடைத்திட துவா செய்ய இஸ்லாமிய சகோதரனாக கேட்டு கொள்கிறேன். நீங்கள் இடும் கருத்தே எங்களின் பாதி மருந்து. தயவுசெய்து கருத்திடுங்கள்.
இவன்
முஹம்மது அன்சாரி
கோவை மத்திய சிறை
கோவை.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தமிழக முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மல்லிபட்டினம் மேல்நிலைப்பள்ளியில் +1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.