இன்று 3.3.2012 இன்றைய திகதியில்தான் அன்று 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கப்பட்டது முஸ்லிம் சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்டது. மேற்கின் நூற்றாண்டு கால கனவு நிஜமானது. இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் எதோ ஒருவகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு தலைமை வகித்து வந்தது. முழு மனித இனத்திற்கு அருளாய் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்றைய திகதியில் அன்று அழிக்கப்பட்டு இன்றுடன் 88 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மா கிலாபத் நோக்கி மிக வேகமாக முன்னேற தொடங்கி விட்டுள்ளது அதிலும் இந்த ஆண்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல நாடுகளிக்கும் பாரிய அரசியல் வெற்றிகளை பெற்றுவருகிறது. அரசியல் வெற்றி என்பது பிரமாண்டமான இஸ்லாமிய எழுச்சியின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டும்தான் . அரபு முஸ்லிம் நாடுகளின் ஒன்றன் பின் ஒன்றாக சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டு அந்த இடங்களை இஸ்லாமிய சக்திகள் கைப்பற்றி வருகின்றமை இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும் .
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் துனூசியாவில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது . அதன் பின்னர் அந்த பிராந்தியம் சந்தித்த இரண்டாவது தேர்தல் மொரோகோவில் இடம்பெற்றது அதிலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் எகிப்தில் இஸ்லாமிய சக்திகள் மிகப் பாரிய வெற்றிகளை பெற்றுள்ளது ,அதேபோன்று குவைத்திலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது , அதை தொடந்து அந்த வெற்றி பாதையில் லிபியா , யெமன், சிரியா ஆகியா நாடுகள் பயணிக்க காத்திருகிறது . ஆகவே இந்த ஆண்டில் கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆவது ஆண்டை சந்தித்துள்ள முஸ்லிம் உம்மா உலகில் மிகவும் பலமான இஸ்லாமிய எழுச்சி ஒன்றை கண்டு வருகிறது.
இந்த சந்தர்பத்தில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தனது குத்பா உரையில் விடுத்துள்ள அழைப்பை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது – ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசொன்றை எகிப்து, லிபியா, தூனிஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு கிலாபத் நோக்கிய பயணத்துக்கான முன் அழைப்பாக பார்க்கப் படுகிறது.
அதேவேளை கிலாபத் இறுதியாக எந்த தேசத்தில் அழிக்கப்பட்டதோ அதேதேசத்தை இஸ்லாத்தை நேசிக்கும் , அதை உலகில் நிலைநிறுத்தும் உன்னதமான நோக்கம் கொண்ட அரசியல் கட்சி ஒன்று ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. எந்த பூமியில் கிலாபத் அழிக்கப்பட்டதோ அந்த பூமியை கைப்பற்றியுள்ள அரசியல் சக்திதான் இன்றையா இஸ்லாமிய எழுச்சியின் அரசியல் மாதிரியாக கொள்ளப்பட்டு வருகின்றது .
உண்மையில் துருக்கியில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முஸ்லிம் உலகின் புதிய அரசியல் ஒழுங்கு ஒன்றின் முன்னோடியாக பார்க்கப்படுகின்றது. துனூசியாவிலும், எகிப்திலும் தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் மொரோகோவிலும் , குவைத்திலும் , வெற்றி பெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகளும் ,இன்னும் லிபியாவிலும் , யெமனிலும் வெற்றிநோக்கி நகரும் மக்களும் துருக்கியின் மாதிரி அரசியலை தமது முன்மாதிரி அரசியலாக கைகொள்ள விரும்புகின்றனர்.அதை நோக்கியே அழைப்பும் விடுத்து வருகின்றனர் .
இன்ஷா அல்லாஹ் நாம் சந்தித்துள்ள 88 ஆவது ஆண்டு கிலாபத்தின் மீள் எழுச்சிக்கான காலத்தில் நாம் உள்ளதை தெளிவாகவே காட்டுகிறது , பயணங்கள் தொடரட்டும் .