வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 27 June 2011

டோன்ட் ஒர்ரி


அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை நன்மையின் பக்கம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் அறிய செய்ய வேண்டும் .

சார்  எனக்கு  இங்கிலீஷ் படிக்க தெரியும்   ஆனா அதோட அர்த்தம்  முழுசா எனக்கு  தெரியாது  சார்

இனி கவலை வேண்டாம்

இன்று ஒரு தகவல் :
GOOGLE மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபியர்ப்பு வசதியை இன்று முதல் உலக மக்குளுக்கு அறிமுகபடுத்தி உள்ளனர்.
கீழே கொடுத்துள்ள LINK மூலம்  ஆங்கில வாசகத்தை டைப் செய்தோ ,  Cut  & Paste முறையிலோ பதிவு செய்தால் , தமிழாக்கம் செய்த வாசகம் நமக்கு கிடைக்கும் !
நிச்சயம் இது ஒரு நமக்கு கிடைத்த அற்புதமே ! 
http://translate.google.co.in/?ie=UTF-8&hl=en&tab=wT#en|ta|                 இச்செய்தி நம் வாசகர்களுக்கு 

மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்று  நினைக்கிறேன் .

இது  கூகிளின்  முதல் வெர்ஷன்      மேலும்  இது டெவலப் செய்யப்பட்டு   இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூகிள் செய்தி கூறுகின்றது.
      

Monday 20 June 2011

செல்போன்


கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Monday 13 June 2011

லாரி கவிழ்ந்து விபத்து

நேற்று 14/06/2011 திங்கள் கிழமை மாலை சுமார்  4 மணியளவில் மல்லிபட்டினம்  பஸ் ஸ்டாப்பில்  ஹலால் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே    E.C.R ரோட்டில் சிமென்ட் மூட்டை  ஏற்றிக்கொண்டு அதிரை வழியாக  செல்வதற்காக வந்த லாரி இரண்டாம்புளிக்காடு வழியாக வந்து விருட்டென்று E.C.R  ரோட்டில் ஏறிய பஸ் மீது மோதாமல் இருக்க லாரி திடீரென்று வளைத்ததில்  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


எப்போதும் அந்த இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்   நல்லவேளையாக விபத்து நடந்த நேரத்தில் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால்    இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை .

Wednesday 8 June 2011

அதிர்ச்சி

        சுமார் 45 நாட்களாக  மீன் பிடிக்க தடை இருந்த காலத்தில்  தன்னுடைய விசைபடகை தண்ணீரிலிருந்து  மேலே  ஏற்றி      ஐம்பதாயிரம்    அருபதாயிரம்    செலவு செய்து   போட்டை   வேலை பார்த்து     மீன் பிடி தடை காலம் முடிந்து    கடலுக்கு  அனுப்பியவர்களுக்கு  தொடர்ந்து  நஷ்டம் .

         இன்றும் வழக்கம் போலவே நஷ்டம் ஆனதால்  விசைப்படகு உரிமையாளர்கள்  மிகுந்த அதிர்சிக்குள்ளாகி  இருக்கிறார்கள்.
       
           இன்று 09/06/2011  காலை படகுகள் வருவதற்கு பதில்    நேற்று இரவே    அணைத்து படகுகளும் கரை வந்துவிட்டன..      ஒவ்வொரு படகுக்கும்   ரூபாய் இரண்டாயிரம் முதல் ஆறாயிரம் வரை நஷ்டம் ஆகி விட்டதாக  விசை படகு உரிமையாளர்  ஒருவர் சோகத்துடன்   தெரிவித்தார்.   

Thursday 2 June 2011

mallipattinam.com ஓர் அறிமுகம் ...

                              அஸ்ஸலாமு அலைக்கும்

    மல்லிபட்டினம் நியூஸ் வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி இனி இந்த தளத்தை mallipattinam.com   என்றும் வந்து அடையலாம் .