வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 31 October 2011

மழை ஆரம்பம்

மழை காலம் ஆரம்பத்தின்  முதல்படியாக நேற்று இரவு கனமழை  பெய்தது .
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.

Friday 28 October 2011

VICE PRESIDENT தேர்வு

   
   தேர்தலுக்கு முன்பு பேசிக்கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்று  நீண்ட இழுபறிகளுக்கிடையே சின்னமனையைசேர்ந்த பெண் ஒருவர்    VICE PRESIDENT ஆக  தேர்வு செய்யப்பட்டார். 

Tuesday 25 October 2011

பதவி ஏற்பு விழா



இன்று காலை10:30  மணிக்குமருதமுத்து அவர்களுக்கு  ஊராட்சிமன்ற தலைவர் பதவி    ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 

பூக்கொல்லையில் வஹாப் அவர்களுக்கு  கவுன்சிலர் பதவி ஏற்பு விழா காலை 10;30 க்கு நடைபெற்றது.
அதே போல் அனைத்து வார்டு உறுப்பினர்களும்  பதவி ஏற்றுக்கொண்டனர்

















Sunday 23 October 2011

விளக்கம்


           
          அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

         அன்பிற்கினிய நமதூர் உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் .....


 A.K தாஜுதீன் பேட்டியை வெளியிடுவது சம்பந்தமாக


    ஜமாத் சார்பான அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற முறையிலும் வெற்றிபெற்ற அணியை வழிநடத்தியவர் என்ற முறையிலும் A.K தாஜுதீன் அவர்களுடைய பேட்டியை வெளியிட்டுருக்கிறேன்.


     அதுபோலவே அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளருடைய பேட்டியையும் வெளியிட்டிருக்கின்றேன். யார் வெற்றிபெற்றிருந்தாலும் வெற்றிபெற்றவர்களின் பேட்டியை வெளியிட்டிருப்பேன். இதில் எந்த மாற்றுகருத்தும் எனக்கு கிடையாது. 


     தேர்தல் முடிவுகளை உடனுக்குடன்  வெளியிட்டதற்காக  துபை மற்றும் சவுதி யிலிருந்து  எனக்கு கால் செய்து  பாராட்டு தெரிவித்த நமது வலைப்பூ பார்வையாளர்களுக்கு  எனது நன்றியையும்(அல்ஹம்துலில்லாஹ்)  சலாத்தினையும் தெரிவித்துகொள்கின்றேன்.(அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மாதுல்லாஹி வ பர்க்காத்துஹு)


      இது நமதூருக்கான வலைப்பூ.இது அனைவரது கருத்துகளையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்ற நோக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டது.


     இதில் கருத்துக்கள் வெளியிடுவோர் உங்களது நிஜபெயர்களிலேயே கருத்துக்களை வெளியிடலாம்.அப்போதுதான் நமக்குள் கருத்துபரிமாற்றங்கள்  ஏற்பட்டு ஒரு  ஒற்றுமை வட்டத்துக்குள்  வரமுடியும். அப்போதுதான் நானும் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே  இந்த வலைப்பூவை தொடர்ந்து நடத்த ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் என்றும் நம்புகிறேன்.

   (R.M.S ரஹ்மான்கான்  அப்துல் ரஹ்மான்  ஷேக் S ,K.M.H ஷேக்,மல்லிகைபுதல்வன்  ஆகிய ஒரு சிலர் மட்டுமே தங்களது பெயர்களில் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு மிக்க நன்றி )


    ஏனெனில் நம் ஊரை சேர்ந்த அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களே.அதுவும் ரத்த உறவுகள்.
இடையில் சிற்சில கருத்து வேறுபாடுகள் சரியான புரிதல் இல்லாமை போன்ற சாதாரண விஷயங்களினால் ஏற்பட்ட குரோதங்கள் விரோதங்கள்  களைந்து ஒன்றுபட்ட ஒருமித்த கருத்துக்கு வரமுடியும் என்றும் உறுதியாக நம்புகின்றேன்.

    அது போல் உங்களுடைய பெயர்களிலேயே நீங்கள் கட்டுரைகள் வெளியிட்டால்  விருப்பு வெறுப்பின்றி வெளியிட நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். nijam802@gmail.com என்ற  ID க்கு அனுப்பவும்.

    மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்  உங்களுடைய கருத்துக்கள்  மற்றும் கட்டுரைகளை பொறுத்தே  நான் இந்த வலைப்பூவை தொடர்வதா வேண்டாமா என்று  தீர்மானிக்கும்.

Saturday 22 October 2011

வாக்கு விபரம்

                                                                                            செல்லாதவை 140
வார்டு
கத்தரிக்கோல்
மருதமுத்து
பூட்டு
ஜின்னா
கைஉருளை
வீரப்பன்
ஏணி
மைதீன்
1 & 2
201
305
5
6
3 & 5
169
290
6
13
4
71
142
2
5
6&7
525
64
1
1
8&9
236
308
12
3
10
159
53
26
1
11&12
181
246
29
3

1542
1414
81
32
                                    

தேர்தல் வெற்றி : ஜனாப் A.K தாஜுதீன் பேட்டி




தேர்தல் வெற்றி








Friday 21 October 2011

வெற்றி

ஜமாத் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  மருதமுத்து

அவர்களும்  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட   அப்துல் வஹாப்  அவர்களும்

வெற்றிபெற்றனர்   .

SDPI வெற்றி


வார்டு
மொத்தம்
பதிவானவை           
        
வேட்பாளர்கள்    
செல்லாதவை
  
   1
   
    390
   
    273
A.K லியாகத் அலி --86
நூருல் இஸ்லாம்--140
பஷீர்--31

    16

  
   2
  
   393
  
   263
அப்துல் ஹமீது--104
ரசூல் முகைதின்--149
    -------

   
  4
   
  334

    227
பிச்சை பொண்ணு--97
மெஹ்மூதா பீவி--124
      
       6

  
   8
  
   328
   
    227
ரியாஸ் அஹமது--132
முகமது முகைதீன்--90

      5






SDPIசார்பாக போட்டியிட்டஉறுப்பினர்கள் 4 
வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tuesday 18 October 2011

வாக்குபதிவு நிறைவுற்றது





நடந்து முடிந்த வாக்கு பதிவு விபரங்கள்




வார்டு வாரியாக


1  , 2                             530


4                                   230


3,   5                             479


6.   7                             620


8,  9                              574


10, 11, 12                     742


மொத்தம் பதிவான வாக்குகள்   3175


12 வார்ட்களுக்கான வாக்குபதிவு மூன்று பூத்துகளில் நடைபெற்றது


12 வார்டு விபரங்கள்


1.வடக்கு தெரு


2.உமறு புலவர் தெரு


3.திப்பு சுல்தான் தெரு


4.சீதக்காதி தெரு


5.ஷாபி இமாம் தெரு


6.ராமர் கோயில் தெரு


7.காமாட்சி அம்மன் கோயில் தெரு


8.புதுமனை தெரு


9.கேர் காலனி , அம்பேத்கர் நகர்


10.சின்னமனை


11.மனோரா காலனி  , சின்னமனை


12. S.R பட்டினம் , கள்ளிவயல், மருதுபாண்டி நகர்.


1 முதல் 5 வரை உள்ள வார்டுகளுக்கு  மல்லிபட்டினம்  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்

6 முதல் 9 வரை உள்ள வார்டுகளுக்கு மல்லிபட்டினம்  ஊராட்சி  ஒன்றிய நடுநிலை பள்ளியிலும்


10 முதல் 12 வரை  உள்ள வார்டுகளுக்கு  சின்னமனை  ஊராட்சி  ஒன்றிய நடுநிலை பள்ளியிலும்  நடைபெற்றது.


ஜனாப் அம்பலம் கனடா ரபி அவர்கள் உரை



                ஜமாத் வேட்பாளர்களை ஆதரித்து  ஜனாப் 


அம்பலம் கனடா ரபி


அவர்கள் மல்லிபட்டினம் கடைத்தெருவில் 


உரையாற்றினார்கள்.

Monday 17 October 2011

ஹபீப் முகம்மது அவர்களின் பேட்டி




ஜனாப் K.M.H ஹனீபா அவர்களின் பேட்டி




ரியாஸ் அவர்களின் பேட்டி



Sunday 16 October 2011

ஜனாப் அப்துல் காதர் அவர்கள் ஒட்டு வேட்டை

இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக உருளை சின்னத்தில் போட்டியிடும் வீரப்பன் அவர்களை ஆதரித்து அவர்கள் ஒட்டு வேட்டை


ஜனாப் ஹமீது அவர்களின் பேட்டி






வேட்பாளர்கள்