![](http://www.lalpetexpress.com/wp-content/uploads/2012/11/inl1-400x300.jpg)
தீபாவளியன்று வெளிவந்த நடிகர் விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லீம் சமூகம் குறித்த தவறான கருத்துக்கள் கூறப் பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. தேசிய லீக் சேர்ந்தவர்கள் விஜயின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
![](http://www.lalpetexpress.com/wp-content/uploads/2012/11/inl2-400x300.jpg)
துப்பாக்கிப் படத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பால் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப் பட்டது. இந்நிலையில் நடிகர் விஜயின் வீட்டை முற்றுகையிட முயன்றதாக தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அன்சாரி நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரனை தொடர்பு கொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது .