வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 30 April 2012

வேண்டுகோள்

மல்லிபட்டினம் கந்தூரி விழாவின் போட்டோ அல்லது வீடியோ போடுவதற்கு உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா?

உங்கள் மேலான கருத்துக்களை எழுதவும்.

Tuesday 10 April 2012

மோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்!



குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்த 2002ம் ஆண்டைத் தொடர்ந்து கடந்துபோன துக்ககரமான 10 வருடங்களில் மோடியின் அரசு இயந்திரம், பாஜக வின் செல்வச் செழிப்பு, குஜராத் இந்துக்களின் மோடி ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் மோடியை பொது அரங்கிற்கு கொண்டு வருவதற்கான பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கென அனைத்துவிதமான அரசியல் அஸ்திரங்களும் பொருளாதார செலவீனங்களும் இந்தியாவிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் யாவும் எவ்வித பலனையும் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.


மோடிக்கு விசா தர 6 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா மறுத்து விட்டது. பிரிட்டனோ மோடியின் வருகைக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்த பின்பே அனுமதித்தது. இந்தியாவிற்குள்ளும் விரும்பிய மாநிலத்திற்குள் வருகை தர முடியாத நிலைமை மோடிக்கு! இந்தியாவில் பாஜக ஆளும் சில மாநிலங்களுக்கு மட்டுமே மோடி சென்று வர முடிகிறது.

முஸ்லிம்கள் அல்லது மதச்சார்பற்ற இந்து பெருமக்கள் போதுமான எண்ணிக்கையில் வாழுகின்ற மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மோடி கால் வைக்க முடியாத நிலை தான் குஜராத் கலவரம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கடந்த பின்பும் நிலவுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மோடிக்கு ஆதரவு தருவதன் காரணமாக மிகுந்த பாதுகாப்புகளோடு அரசு விழாக்கள் அல்லது சில தனிப்பட்ட உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடியால் முடிகிறது. அதுவும் திருடனைப்போல கமுக்கமாக வந்து செல்கிறார். அவர் தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு தமிழக மக்களிடம் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியும்.

ஆயினும் நாம் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மோடியால் சகஜமாக வந்து செல்ல இயலாத நிலைதான் உள்ளது.

இந்தியாவில் முன்னிலை ஊடகங்கள், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை 2002 முஸ்லிம் இனப்படுகொலையில் இருக்கும் மோடியின் பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. கெடு வாய்ப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏனோ மோடி மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க முன் வரவில்லை. இது மோடிக்கு சாதகமாக இருக்கிறது.

மோடியின் கொடுஞ்செயல்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு மிகச் சிரமத்திற்கிடையேதான் சென்றடைகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களும், குஜராத்தி இந்துக்களும், பாஜக ஆதரவாளர்களும் மோடியின் ‘கொடுங்கோலன்' இமேஜை மாற்ற விரும்புகின்றன. இவர்களிடம் இருந்து பெருமளவிலான நிதிகள் பாஜக மற்றும் இந்துத்துவா இயக்கங்களுக்கு வருகின்றனர்.

இவர்கள் பெருளாதார வளத்துடனும், அமெரிக்கா, பிரிட்டன் அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பிலும் இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் தொடர்புகள் மூலம் அவ்வப்போது மோடிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த தொடர்ந்து இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக மற்றும் மோடிக்கு உதவும் வகையில் முஸ்லிம்களின் எதிரிகளான யூதர்களிடமும் இவர்களது தொடர்புகள் ஆழமாக உள்ளன.

இதுபோன்ற தொடர்புகளாலும், பெரும் பொருளாதாரப் பின்னணியோடும் இவர்கள் செயல்பட்டு வந்துபோதிலும் 2002ல் மோடியின் மீது படிந்துவிட்ட கொடுங்கோலன் என்ற கறையை துடைத்தெரிய இயலவில்லை என்பதுதான் யதார்த்தம்!

ஏனெனில் 2002 முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தில் மோடிக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மோடி மீது ஏற்பட்டு விட்ட கறையை மறைக்க முயற்சிப்பது மிகக் கடினமானது.

இதன் மூலம் நாம் சொல்ல வருவது யாதெனில், முஸ்லிம்கள் மோடிக்கு எதிரான போராட்டத்தை வீரியம் குறையாமல் முன்னெடுக்க வேண்டும்; ஊடகங்கள் மோடிக்கு எதிராக அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இதன் கார ணமாக மோடி குஜராத் எல்லைக்குள்ளேயே முடக்கப்பட வேண்டும். இது படித்த மற்றும் அறிவுஜீவி முஸ்லிம்களின் பொறுப்பாகும்.

மோடியின் குற்றங்களுக்காக மோடியை சட்டத்திற்கு முன்னால் இழுத்து வந்து நிறுத்துகிற வீரியமான காரியங்களில் இறங்கவில்லை என்றால் முஸ்லிம்கள் வாழ்வதில் அர்த்தமில்லை!

பாஜகவுக்குள் இண்டு பிரிவினர் உண்டு. ஒன்று மோடியை பாஜகவின் அரசியல் நம்பிக்கையாக கருதும் ஒரு பெரும் கூட்டத்தினர், மற்றொன்று மோடியை கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்கள். பாஜக உடைந்தால் மோடியின் பக்கம் சாயும் பிரிவினர் இவர்கள். ஆனால் பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களோ, முஸ்லிம்களும், மதச்சார்பற்ற இந்துக்களும் மோடியை மன்னிக்காதவரை அவர் (2002க்கு முன் இருந்த) பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்றும், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கு பாஜக தள்ளப்படுகிறது என்பதையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனடிப்படையில்தான் சமீபத்திய உ.பி., மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ‘கிங் மேக்கர்'களாக முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்ற செய்தி பாஜகவுக்கு கெட்ட செய்தியாக தெரிகிறது.

இந்தியாவில் மாநிலக் கட்சிகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டுகள், திமுக போன்ற கட்சிகள் அரசியல் நிர்பந்தங்களின்போது கூட பாஜகவையோ, மோடியையோ அரவணைக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம் மோடியையும், பாஜகவையும் முஸ்லிம்கள் மன்னிக்கத் தயாரில்லை என்பதுதான்.

இக்கட்சிகள் யாவும் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் பெரும்பாலும் வெற்றி பெறும் கட்சிகள். அதனால் முஸ்லிம்களின் ஆதரவை அவை இழக்கத் தயாரில்லை.

கடந்த காலங்களில் பாஜகவோடும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குக் காரணமான கல்யாண்சிங்கோடும் கூட்டணி வைத்த மேற்கண்ட காட்சிகளில் சில அதன் மூலம் அடைந்த அரசியல் வீழ்ச்சியை அறிந்து வைத்துள்ளன.

ஆக, முஸ்லிம் சமுதாயம் அறிவுப்பூர்வமாக கச்சிதமான அரசியல் தந்திரங்களை கையாள வேண்டும். மோடியின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியபடியே அருக்கு எதிரான சிந்தனைகளை மக்கள் மையப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மோடிக்கு எதிரான செய்திகளை இஸ்லாமியப் பத்திரிகைகள் முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டும். இதன் மூலம் மோடியை குஜராத் எல்லைக்குள்ளேயே நிறுத்த வேண்டும்.

எப்பொழுதெல்லாம் மோடியின் ஆதரவாளர்கள் (டைம் பத்திரிகை, ஃப்ருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்று) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மோடியை நல்லவராக காட்ட முற்படுகிறார்களோ, மோடிக்கு முக்கியத்துவத்தை உருவாக்கித் தர முயற்சிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்களும் தங்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும்.

மதச்சார்பற்ற இந்துக்கள், நடுநிலை சிந்தனையாளர்களை அதிகளவில் இணைத்து மோடியின் ஆதரவாளர்களை எதிர் கொள்ள வேண்டும்.

இந்த லாபியை தொடர்ந்து முஸ்லிம்கள் செய்து வர வேண்டும். குஜராத்திற்கு வெளியே கால் வைக்க மோடிக்கு அருகதை இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதி கிடைக்காத குஜராத் முஸ்லிம்களுக்கு இது மன ஆறுதலைத் தரும்.

மோடியைப் புகழும் டைம் பத்திரிகை!

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வசித்து வரும் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களால் மோடியை சிறந்த தலைவராக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அங்குள்ள அரசியலிலும், ஊடகங்களிலும் இந்துத்துவாவினர் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள் என்பதற்கு உதராணமாக சமீபத்திய அமெரிக்க ‘டைம்' பத்திரிகை வெளியிட்ட செய்தி ஆதாரமாக உள்ளது.

‘மோடி என்றாலே வணிகம் என்று பொருள். ஆனால், அவரால் இந்தியாவை வழி நடத்த முடியுமா?' என்ற தலைப்பிட்டு மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம் பத்திரிகை (ஆசிய பதிப்பு)

மேலும், மோடி ஒரு சர்ச்சைக்குரிய, லட்சிய உறுதி கொண்ட, நல்ல அரசியல்வாதி என்றும் மோடியின் சாத்பாவ்னா உண்ணாவிரதம் மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது என்றும் எழுதியுள்ளது டைம் பத்திரிகை.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாக்கள் நடத்திய இனப்படுகொலையின் அதிர்ச்சி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விலகாத நிலையில், இரு சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கம் என்ற பாலத்தை எழுப்பி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்ளும் முயற்சியை எடுத்து வருகிறார் மோடி என மோடியை நல்லவராக சித்தரிக்க முயல்கிறது டைம் பத்திரிகை.

இச்செய்திகளுக்கான உபயம் நிச்சயமாக அமெரிக்க இந்துத்துவாக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் டைம் பத்திரிகையை குஜராத் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். அதோடு பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இமெயில்கள் மூலம் டைம் பத்திரிகைக்கு கண்டனத்தை தெரிவிக்குமாறும் அவர்கள் உலக முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ப்ருக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனமும் மோடியைப் புகழ்ந்திருக்கிறது.


இதுபோன்று மோடி நல்லவராக சித்தரிக்கப்படும்போதெல்லாம் அவரது கொடூர முகத்தை மக்கள் மத்தியில் நினைவூட்டிக் கொண்ட இருக்க வேண்டும். இதனை முஸ்லிம்களும், மதச்சார்பற்ற சக்திகளும் செய்ய வேண்டும்.

முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்த ஒருவரை டைம் பத்திரிகை எப்படி பெருமைப்படுத்த முடியும்?
நன்றி-http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19334

Sunday 8 April 2012

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல-மெரினாவில் இளைஞர்கள் பிரசாரம்


சென்னை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை விளக்கும் பிரசாரத்தை தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு சென்னை மெரீனா கடற்கரையில் மேற்கொண்டது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

ஒளிராத இந்தியாவும் அன்னா ஹசாரேவும் - முத்து கிருஷ்ணன்


நேற்று குவைத்தில் உள்ள பஹாஹீல் பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் சமூக போராளியும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன் அவர்களின் "நஞ்சாகும் நீதி" எனும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். முத்து கிருஷ்ணன் குறித்து இந்நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான வாசகர் கடிதம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

புத்தக வெளியீடு, அதற்கான விமர்சனம், வாழ்த்துரை எல்லாம் முடிந்த பிறகு முத்துகிருஷ்ணன் பேசியதிலிருந்து சில முக்கிய குறிப்புகளை தொகுத்து தருகிறேன். வெள்ளி அன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பலஸ்தீன பயணம் குறித்து இரண்டு மணி நேரம் பேசியுள்ளார் என்பதை கலந்து கொண்டவர்கள் சொன்னார்கள். விளம்பரம் இல்லையென்றாலும் சுமார் நூறு நபர்கள் கலந்து கொண்டனர்.

1. இது வரை தன்னுடைய எப்புத்தகத்துக்கும் புத்தகவிழா நடத்தியதில்லை என்றும் தன்னை பாராட்டும் அளவு தான் எதையும் செய்யவில்லை என்றும் தன்னுடைய கடமையையே தான் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

2.  இந்தியா வல்லரசு என்று கணவு காணும் அதே வேளையில் தான் நேரில் கிராமங்களில் பார்த்த இந்தியாவுக்கும் ஊடகங்கள் சொல்லும் இந்தியாவுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

3.  மஹாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் 10 வருடங்களில் 2.5 இலட்சம் விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை பூச்சி மருந்துகளை அடித்து விவசாயம் பொய்த்து தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை சொன்னார். இந்திய ஊடகங்களிலேயே கிராமபுற நிலவரங்களை கவனிப்பதற்காக சிறப்பு எடிட்டரை ஹிந்து பத்திரிகை வைத்துள்ளதாகவும் அதன் சிறப்பு எடிட்டர் சாய்நாத் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்ற தகவலையும் தந்தார்.

4. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் விரிவாக்க பணிகளுக்காக அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை சொன்னார்.

5.  குஜராத்தில் கோத்ராவில் 68 நபர்கள் கொல்லப்பட்டதற்கு "அவர்கள் ஒரு தின போட்டியை நடத்தினார்கள். நாம் டெஸ்ட் போட்டிகளை நடத்துவோம்" என்று கூறி 2000 முஸ்லீம்களை மோடி கொன்றதை ஆதாரத்துடன் கூறினார்.

6. சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதாக கூறி அங்குள்ள 5 இலட்சம் மக்களை வெளியேற்றி 36,000 ஏக்கர் நிலங்களை சுவராஜ் பால் போன்ற பண முதலைகளிடம் கனிம வளங்களை சுரண்ட கொடுத்த அரசியலையும், பழங்குடி மக்களை கொண்டே அவர்களை கொல்ல சிறப்பு படைகளை உருவாக்கிய மக்கள் விரோத அரசியலையும் படம் பிடித்து காட்டினார்.

7.  இந்தியா சுதந்திரம் அடையும் வரை வெள்ளைக்காரனுக்கும் அடிமையாகாமல் இருந்த ஹைதரபாத் நிஜாமை படை பலத்தை கொண்டு ஆந்திராவை இந்தியாவுடன் இணைத்ததையும் தெலுங்கானா மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதாலேயே தனித் தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளாக சொன்னார்.

8.   11 ஆண்டுகளாக சோற்றை பிசைந்து கொண்டு தன் மகளுக்கு சோறு ஊட்ட ஆவலோடு காத்து நிற்கும் மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவின் தாயாரின் கண்ணீர் கதையையும் விவரிக்கவே முடியாத காஷ்மீரின் சோகங்களையும் பட்டியலிட்டார்.

9. கூடங்குளத்தில் போராடும் 10,000 பொதுமக்களை 8,000 காவல்துறை கொண்டு அடக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை சாடிய முத்துகிருஷ்ணன்  நகரங்கள் கொழுப்பதற்காக கிராமங்களை இந்தியா ஒளிராமலேயே வைத்து கொன்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். 2 கேரள மீனவர்கள் இத்தாலிய மீனவர்களால் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என்று சொன்ன ஊடகங்களில் இலங்கையால் கொல்லப்பட்ட 547 தமிழக மீனவர்களை பற்றி கொஞ்சமும் கவலை படவில்லை என்றார்.

10. அன்னா ஹசாரே பற்றிய கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த முத்துகிருஷ்ணன் 64 கோடி போபர்ஸுக்கு பதறிய நாம் இன்று 1.75 இலட்சம் கோடியை குறித்து கவலைப்படாததற்கு காரணம் கார்பரேட்டுகள் என்று குறிப்பிட்டவர் அத்தகைய கார்பரேட்கள் ஆதரவோடு ஊழலை ஒழிக்க நினைப்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார். விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட 2.5 இலட்சம் விவசாயிகளை பற்றி கவலை கொள்ளாத ஊடகங்கள் ஐ.பி.எல்ல்லுக்கு இணையாக அன்னாவுக்கு லைவ் கவரேஜ் கொடுத்தது அவரின் நம்பகத்தன்மையை இன்னும் கேள்விக்குறியாக்கியது என்றார்.

11.  அன்னா ஹசாரேவின் கிராமத்திற்கு தாம் சென்றதாகவும் அங்கு எவ்வித ஜனநாயக மாண்புகளும் இல்லாமல் அன்னாவின் சர்வதிகாரம் கொடி கட்டி பறப்பதாகவும் இன்று வரை ஒரு கிறிஸ்தவர் அல்லது ஒரு முஸ்லீமையும் தன் கிராமத்தில் குடியேற அன்னா அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் சொன்ன முத்துகிருஷ்ணன் இடஒதுக்கீடு விஷயத்திலும் அன்னாவின் நிலைப்பாட்டை தோலுரித்து காட்டினார். உதயகுமார் அமெரிக்காவில் பணிபுரிந்த போது ஹிந்து ராம் உள்ளிட்ட சுமார் 20 அறிவு ஜீவிகளை அமெரிக்காவுக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தியதை இன்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்றும் இத்தகைய அரசு அடக்குமுறைக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடுவேன் என்றும் முத்துகிருஷ்ணன் கூறினார்.

Friday 6 April 2012

சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் டைம் இதழின் கணக்கெடுப்பில் மோடி மோசடி: காங். குற்றச்சாட்டு



 அஹமதாபாத்:’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.

அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர்,  குஜராத் அரசின் பல்வேறு  இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம்  இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

‘ஆம்’ பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த  தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் தாம் வரவேண்டும் என்ற சாதாரண  காரணத்துக்காகத்தான் என மோத்வாடியா குற்றம்சாட்டினார்.

டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்பில் பட்டியலில் மோடி 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரெட்டிட்.காம் பொது மேலாளர் எரிக் மார்ட்டின் முதல்  இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 4 April 2012

தமிழக சிறை கைதிகள் இனி மேல் சுதந்திரமாக பேசலாம்



சென்னை : புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் முன்பு போல் இனி திருட்டுதனமாக பேச வேண்டியதில்லை. அதிகாரபூர்வமாகவே அவர்கள் பேசுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்து உள்ளது. ஆம் விரைவில் டெலிபோன் பூத்துகள் சிறைகளில் அமைக்கப்பட உள்ளன.
புழல், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 சிறைச்சாலைகளுக்கு இவ்வசதி முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. டெலிபோன் பூத்துகள் அமைப்பதற்காக 1 கோடியே 58 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி மேல் திருட்டுத்தனமாக செல்போன்கள் சிறைகளுக்கு  கடத்தப்படுவதும் அது தொடர்பான ஊழல் மற்றும் குற்றங்களும் குறையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் அமலுக்கு வந்த பின் சிறை கைதிகள் சிறைசாலை அதிகாரிகளிடம் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் இரு தொலைபேசி எண்களை கொடுத்து அவ்வெண்களை தொடர்பு கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 3 தடவையும் 30 நிமிடங்கள் வரையும் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவறாக உபயோகித்தால் இவ்வசதி அக்கைதியிடமிருந்து திரும்ப பெறப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 3 April 2012

வரலாற்றில் இன்று கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள்



 இன்று 3.3.2012 இன்றைய திகதியில்தான் அன்று 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கப்பட்டது முஸ்லிம் சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்டது. மேற்கின் நூற்றாண்டு கால கனவு நிஜமானது. இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் எதோ ஒருவகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு தலைமை வகித்து வந்தது. முழு மனித இனத்திற்கு அருளாய் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்றைய திகதியில் அன்று அழிக்கப்பட்டு இன்றுடன் 88 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மா கிலாபத் நோக்கி மிக வேகமாக முன்னேற தொடங்கி விட்டுள்ளது அதிலும் இந்த ஆண்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல நாடுகளிக்கும் பாரிய அரசியல் வெற்றிகளை பெற்றுவருகிறது. அரசியல் வெற்றி என்பது பிரமாண்டமான இஸ்லாமிய எழுச்சியின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டும்தான் . அரபு முஸ்லிம் நாடுகளின் ஒன்றன் பின் ஒன்றாக சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டு அந்த இடங்களை இஸ்லாமிய சக்திகள் கைப்பற்றி வருகின்றமை இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும் .

அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் துனூசியாவில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது . அதன் பின்னர் அந்த பிராந்தியம் சந்தித்த இரண்டாவது தேர்தல் மொரோகோவில் இடம்பெற்றது அதிலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் எகிப்தில் இஸ்லாமிய சக்திகள் மிகப் பாரிய வெற்றிகளை பெற்றுள்ளது ,அதேபோன்று குவைத்திலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது , அதை தொடந்து அந்த வெற்றி பாதையில் லிபியா , யெமன், சிரியா ஆகியா நாடுகள் பயணிக்க காத்திருகிறது . ஆகவே இந்த ஆண்டில் கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆவது ஆண்டை சந்தித்துள்ள முஸ்லிம் உம்மா உலகில் மிகவும் பலமான இஸ்லாமிய எழுச்சி ஒன்றை கண்டு வருகிறது.

இந்த சந்தர்பத்தில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தனது குத்பா உரையில் விடுத்துள்ள அழைப்பை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது – ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசொன்றை எகிப்து, லிபியா, தூனிஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு கிலாபத் நோக்கிய பயணத்துக்கான முன் அழைப்பாக பார்க்கப் படுகிறது.

அதேவேளை கிலாபத் இறுதியாக எந்த தேசத்தில் அழிக்கப்பட்டதோ அதேதேசத்தை இஸ்லாத்தை நேசிக்கும் , அதை உலகில் நிலைநிறுத்தும் உன்னதமான நோக்கம் கொண்ட அரசியல் கட்சி ஒன்று ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. எந்த பூமியில் கிலாபத் அழிக்கப்பட்டதோ அந்த பூமியை கைப்பற்றியுள்ள அரசியல் சக்திதான் இன்றையா இஸ்லாமிய எழுச்சியின் அரசியல் மாதிரியாக கொள்ளப்பட்டு வருகின்றது .

உண்மையில் துருக்கியில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முஸ்லிம் உலகின் புதிய அரசியல் ஒழுங்கு ஒன்றின் முன்னோடியாக பார்க்கப்படுகின்றது. துனூசியாவிலும், எகிப்திலும் தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் மொரோகோவிலும் , குவைத்திலும் , வெற்றி பெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகளும் ,இன்னும் லிபியாவிலும் , யெமனிலும் வெற்றிநோக்கி நகரும் மக்களும் துருக்கியின் மாதிரி அரசியலை தமது முன்மாதிரி அரசியலாக கைகொள்ள விரும்புகின்றனர்.அதை நோக்கியே அழைப்பும் விடுத்து வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் நாம் சந்தித்துள்ள 88 ஆவது ஆண்டு கிலாபத்தின் மீள் எழுச்சிக்கான காலத்தில் நாம் உள்ளதை தெளிவாகவே காட்டுகிறது , பயணங்கள் தொடரட்டும் .

"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு"


"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன்.  அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது, தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள், ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும், பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும், தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ  9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும், அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு, அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில், அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 "இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்