வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 19 September 2011

4 comments:

This comment has been removed by the author.

இறைவனுக்கு பயந்து ஊர் நலனுக்காக உறவுமுறை பாராமல்
சுயநலமின்றி வாக்களிப்போம்-Sheik.KMH

மல்லிப்பட்டினம் முஸ்லீம் சமுதாய மக்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டுமாக.
நாம் அனைவர் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

இன்று நாம் உள்ளாட்சித் தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறோம். இந்த உள்ளாட்சி தேர்தலால் நாம் யாரை நிறுத்தலாம்
என்கிற ஒரு குழுவினர், இந்த தேர்தலால் ஆதாயம் காண நினைக்கும் ஒரு குழுவினர், அனைத்தையும் கெடுத்துக்
கொண்டியிருக்கும் ஒரு குழுவினர், இன்னும் எதையுமே அறிந்தும் அறியாமல் இருப்பது போல் ஒருகுழுவினர் நம்மிடம்
வாழ்ந்துகொண்டியிருக்கிரார்கள் என்பதை நாம் அனைவரும் வல்ல இறைவனின் உதவியால் நன்கு அறிவோம்.

தற்போது யார் நமது (முஸ்லீம்) சமுதாயத்திற்காக மற்றும் ஏனைய சமுதாயத்திற்காக நன்மைகள் செய்வார்கள் என்பதை
நம்மால் யோகிக்க முடியாது. பதவிக்கு வருவதற்குமுன் நல்லவர்களாக இருந்திருப்பார்க ஆனால் பதவி என்கிற ஒரு
அந்தஸ்தைப் பெற்ற உடன் அவரையறியாமல் பல தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லாஹ் நாம்
அனைவரையும் தவறான விசயத்தில் இருந்து காப்பாற்றவேண்டும். ஆமீன்.

இன்று முஸ்லீம் அதிகமாக வாழும் பகுதிகளில் மல்லிப்பட்டினமும் ஒரு மிகப்பெரிய ஊர் என்பதை நாம் அனைவரும்
நன்கு அறிவோம். ஆனால் இந்த ஊர் ஜமாத்தை சார்ந்தவர்கள் சிலர் தனது சுயநலத்திற்காக சமுதாயத்தை அடகுவைத்து
அதன் மூலம் பயன்பெற நினைக்கும் சில நயவஞ்சகர்களை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். மல்லிப்பட்டினம் முஸ்லீம்
மக்கள் மட்டுமே வாக்குளித்தால் ஊராட்சிமன்றத்தலைவர் பதவியும், கவுன்சிலர் பதவியையும் எளிதாக கைப்பற்றிவிடலாம்.
ஆனால் இதுவரை ஒன்றுபட்டு செயல்பட்டதாக தெரியவில்லை. உங்கள் அனைவருக்குள்ளும் பல முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள்,
போட்டி பொறாமைகள், நான் பெரியவனா? நீ பெரியவனா? போன்ற தாழ்வுமனப்பான்மைகள், இதுபோன்ற எண்ணற்ற கருத்து
வேறுபாடுகள் உங்கள் ஊரிலே நிகழ்ந்து கொண்டியிருக்கிறது. இப்படியிருந்தால் மாற்றுமத சாதியினர்தான் நம்மை ஆட்சி பண்ணுவார்கள். உண்மை நிலவரம் அறியாதவர்களினால்தான் நாம் வாழ்க்கையில் பின்னோக்கி போகிறோம். ஏதோ நாம் சம்பாதிக்கிறோம், வசதியாக வாழ்கிறோம் என்பதை மட்டும் கவனித்து வாழக்கூடாது, நமது ஊருக்காக நாம் என்ன செய்தோம்
என்பதை சற்று சிந்தித்தால் மிஞ்சுவது ஏமாற்றம் தான் என்பதை நன்கு புரிந்து கொள்ளவும்.

நாளை நாம் மரணித்தப் பிறகு நம்மிடம் வல்ல இறைவன் மறுமையிலே பல கேள்வி கணக்குகள் கேட்பான் எனபதையும் மனதில்
எண்ணிக்கொள்ளவும். ஆகவே நாம் இதுவரை நீங்கள் எப்படி பிளவுப்பட்டுக் கொண்டியிருந்தீர்களோ அது நடந்தது தடந்ததாக இருக்காட்டும். இன்ஷா அல்லாஹ் எதிவரும் ஊராட்சிமன்றத் தேர்தலில் மல்லிப்பட்டினம் மக்கள் அனைவரும் அல்லாஹ்வின்மீது ஆணையாக ஒன்றுப்பட்டால் பதவிகளை கைப்பற்றலாம்.

இதற்கு இளைய சமுதாயத்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும், ஊர் ஜமாஅத்தார்களும் ஒருமித்த கருத்தில் செயல்பட்டால் இந்த வெற்றியைபெறலாம். நமக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை யோசனை செய்துகொள்ளுங்கள். இந்த வாய்ப்பை நாம் நழுவ விட்டால் மீண்டும் பெறுவதற்கு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நமக்குள் தனிப்பட்ட முறையில் பல விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம் ஆனால் அதை ஊருக்கு நடக்கவிருக்கும் பல நன்மையான விசயத்தில் காண்பிக்கக்கூடாது. தயவுசெய்து குடும்பத்திற்காக மட்டும் பார்க்காமல் ஊர் நலனுக்காக ஒன்றுபடுங்கள். இன்ஷா அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும், ஊர் மக்கள் அனைவருடைய பாவங்களை மன்னித்து நம்மீது அவனுடைய பேரருளை வாரிவலங்குவானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

ஆகவே இன்ஷா அல்லாஹ் மல்லிப்பட்டினம் மக்களிடம் சரியான முறையில் தாவா செய்து ஒருநபரை மட்டும் ஊராட்சி மன்றத்
தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.

இன்ஷா அல்லாஹ் இன்றே முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ் உதவிக்கொண்டு இளைய சமுதாயம் ஒன்றுபட்டு யார் அல்லாஹ்விற்கு பயந்து இந்த ஊராட்சிப் பணியை சிறப்புடன்
செய்வார்கள் என்பதை நன்கு அறிந்து அவர்களுக்காக ஒரே அணியில் நின்று ஒத்துழைத்து வெற்றிப்பெற வையுங்கள்.

முயற்சி செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவீர்கள். நிச்சயம்....! ஆமீன்.
--
என்றும் அன்புடன்
இப்படிக்கு
இனியவன்

MR Tanjai iniyavan,
Good comment and Thank you for u r Advice,