வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 16 March 2012

திருமணம்

மல்லிபட்டினம் காசிம் அப்பா தெரு M.K.M ஜபாருல்லா அவர்களின் மகனார் முகம்மது இஸ்ஹாக் அவர்களுக்கும் மல்லிபட்டினம் திப்புசுல்தான் தெரு M.K.M ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மகள் சித்தி மஜூரா அவர்களுக்கும் 26/02/2012 அன்று திருமணம் இனிதே நடைபெற்றது  




2 comments:

சான்றோர்கள் சங்கமிக்கும் ஊரான மல்லிப்பட்டினத்தில் இப்படி ஒரு அவலம் இன்றும் நடைபெறுகிறது என்பதை என்னும்போது வேதனையாகத்தான் இருக்கிறது! இன்னும் விடியலைப் பெறவில்லை மார்க்க விசயத்திலும், வாழ்க்கை முறையிலும்...! என்று திருந்தப் போகிறீர்கள்?

மார்க்கம் கூறாத பித்அத்களை போதிக்கும் ஆலிம்கள் ஆதயம்பெறவே இதுபோன்ற அவலங்கள் இன்னும் தொடர்கிறது. மல்லிப்பட்டினத்தில் மார்க்கம் கற்றுக்கொடுக்கும் மதரசாக்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்! அப்படியென்றால் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்துகொண்டு மாற்றுமத சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள் என்றால் உறுதியான ஈமானும், தீனும் அவர்களிடம் குடிபுகவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

திருமணம் எவ்வாறு செய்யவேண்டும் என்பதை உத்தம நபிகளார் முஹம்மது நபி ஸல் (அலை) அவர்களின் வாழ்க்கை நெறிகளை பார்க்கவில்லையா? இன்று பல புத்தகங்களும் மேடைப்பேச்சுகளும், மீடியாக்களிலும் மார்க்க அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறார்களே அதையும் நீங்கள் காதுகொடுத்து கேட்கவில்லையா? எப்படி கேட்கமுடியும். சைத்தானின் தூண்டுதலில் வாழும்போது அர்ரஹ்மானின் குரானை திரும்பிப்பார்க்கவே நேரமில்லை, இறைத்திருத் தூதர் முஹம்மது நபி ஸல் (அலை) அவர்களின் ஹதீஸ்களையும் புரட்ட விரும்பவில்லை. விரும்பியிருந்தால் என்றோ திருந்தியிருப்பீர்கள்...!

இன்னும் மார்க்கத்தில் இல்லாத சடங்குகள் மல்லிப்பட்டினத்தில் தலைவிரித்தடுகிறது என்பதற்கு இதுவெல்லாம் ஓர் சாட்சி! மார்க்கம் கற்றவர்களும், மார்க்க அறிஞர்களும் மார்க்கத்தைப் பற்றி அறியாத மக்களுக்கு ஏன் சரியான முறையில் கற்றுக்கொடுக்கவில்லை? லாபம் பார்க்கிறார்கள் பித்அத்களின் மூலம்!

இவர்களின் வாழ்க்கை இஸ்லாத்தின்படி தொடங்குவதற்குப் பதிலாக பாவங்களை சம்பாதித்து ஆரம்பம் செய்கிறார்கள். இதில் லாபம் பெறுவது யார்? ஆமாம் காசுகள் கண்ணை மறைத்துவிட்டதால் மார்க்கம் புரம்தள்ளப் பட்டுவிட்டது? புரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள் பலர்! இதற்கு அனைவரும் உடந்தை...! நாளை பதில் கூறியாக வேண்டும்..மறுமையில்! இன்ஷா அல்லாஹ்...!

மாற்றுமதத்தில் நடைபெறும் நேர்ச்சையின் அடிப்படையில் அறுபடப் போகும் ஆட்டைப்போல் இன்று இவர்கள் மாலை அணிந்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். சிறப்பாக ஆரம்பிக்க வேண்டிய வாழ்க்கை சிர்க்குடன் தொடங்குகிறது!
அனைவரும் பாவங்களை சம்பாதித்துவிட்டு சந்தோசமாக இருக்கிறார்கள்....! சுபஹானல்லாஹ்...!

ஏன் சிந்திக்க மறந்துவிட்டீர்கள்...! தேவையில்லாத சடங்குகளை புறக்கணிக்க!
மார்க்கம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுங்கள்....!
அர்த்தமில்லாமல் வாழும் ஹஜரத்களின் வார்த்தையை நம்பாதீர்கள்! பிறகு பிரயோஜனமில்லாமல் போய்விடுவீர்கள்!
இன்ஷா அல்லாஹ்...!

யா! அல்லாஹ் என்னையும், இந்த ஓர் மக்களையும், எனது ஓர் மக்களையும் சிர்க்கான விஷயத்தை விட்டும், பித்அத்களை விட்டும், சைத்தானின் தூண்டுதலை விட்டும் தவறான என்னத்தை விட்டும் எங்கள் அனைவரையும் பாதுகாத்து நேரான வழியில் வாழ்வதற்கு உதவி புரிந்திடுவாயாக ஆமீன்..! யாரப்பல் ஆலமீன்...!

என்னப்பா இது! ஒருத்தரும் மறுப்புக் கூறவில்லையே!

அப்படியென்றால் நான் கூறியது சரிதானோ?

அப்போ நான் கூறியதை மல்லிப்பட்டினம் மக்கள் ஏற்றுக் கொண்டீர்களோ?

எதுவாக இருந்தாலும் பதிகூருங்கலப்பா...! ஏனப்பா இப்படி இருக்கிறீங்க...!