வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Wednesday 23 November 2011

பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து SDPI ஆர்ப்பாட்டம்

மல்லிப்பட்டினத்தில் பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

மல்லிப்பட்டினம் நவ 23 ;- அதிராம்பட்டினம் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் அமைப்பு நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு SDPI-ன் கிளைத் தலைவர் சகோ.முஹம்மது ஜெய்லானி அவர்கள்  தலைமையேற்க, SDPI-ன் கிளைத் துணைத் தலைவர் சகோ.ரசூல் முஹைதீன்  அவர்கள் வரவேற்புரையாற்றினார், இதனைத் தொடர்ந்து விலையுயர்வைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கண்டன உரையாற்றிய SDPI-ன் மாவட்டப் பேச்சாளர் சகோ.ஹாஜி ஷேக் கூறுகையில் " பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு நஷ்டமே காரணம் என தமிழக அரசு கூறுகிறது, ஆனால் இதற்கு உண்மையான காரணம் அந்தந்தத் துறைகளில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடும் லஞ்ச லாவண்யமுமே இதனை சரிசெய்தாலே விலையுயர்வைத் தவிர்க்கலாம் என புள்ளி விவரங்களுடன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய SDPI-ன் மாநிலச் செயலாளர் சகோ. அபுபக்கர் சித்தீக் கூறுகையில் " மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் விதமாக சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதில் தாமதம்,அண்ணா நுற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்தல், மக்கள் நலப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தல் மின்கட்டண உயர்வு பரிந்துரை எனத் தொடர்ந்து அடித்தட்டு மக்களின் குரல்வளையை நெரிக்கும் செயல்களை செய்துவருகிறது", எனக் கூறினார்.

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர், SDPI-ன் கிளைப் பொருளாளர் சகோ.ரியாஸ் அகமது நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.





1 comments:

ASSALAMU ALLAIKUM.

All people should be Cooperate with SDPI