வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Monday 9 July 2012

தடா வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய இயலாத இந்தியாவின் ஒரே மனிதர் - பழனிபாபா




விதையாய் விழுந்தவர் பழனிபாபா பற்றிய நினைவேந்தல் கட்டுரையை வாசித்து முடித்ததும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்!

பாபா பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டிய சில புதிய விஷயங்களைத் தந்தமைக்கு ஷாநவாஸ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.வாலிப வயதில் இவ்வளவு விஷயங்களை எங்கிருந்து பெற்றார்.எழுதுவதற்கு எங்கிருந்து கற்றார் என வியந்தே போனேன்.பாபாவை ஒரு புதிராக பெரும்பாலான தமிழ் மக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் பட்சத்தில்,அவரது ஆளூமை பற்றிய அருமையான கட்டுரையை,உண்மை விளக்கத்தை இவர்போல் யாரும் இதுவரை வடிக்கவில்லை. எட்டுப் பக்கம் எழுதுமளவிற்கு குறுகிய காலத்தில் சாதனைகளை தனி மனிதனாக பாபா படைத்திருக்கிறார். எனில் மிகையல்ல. இஸ்லாத்தைப் பற்றி யார் என்ன சொன்னாலும், முஸ்லிம் சமுதாயத்தைச் சுற்றி என்னென்ன நடந்தாலும், அவ்வளவையும் கவனித்து, உள்வாங்கி நல்ல் ஞாபக சக்துயுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது சாதாரண காரியமல்ல.

ஏற்கனவே காயிதே மில்லத்-60 என்று அவர் வடித்த கட்டுரை ஹைலைட்டான ஒன்று. சல்மா பற்றியும், திருமா பற்றியும் எழுதியவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு நல்ல தீனி போட்ட கட்டுரைகள். காயிதே மில்லத் 60 கட்டுரையை என்னிடமிருந்து முஸ்லிம் லீக் கட்சித் தோழர்கள் பலர் 'ஜெராக்ஸ்' எடுத்துக் கொண்டார்கள் எனில், ஷாநவாஸின் எழுத்தாற்றலை ஊகித்துக் கொள்ளலாம்.

பாபாவின் பன்முக ஆற்றல்தான் அவர்கள் மீது தமிழல அரசியல்வாதிகள் - முஸ்லீம் லீக் தலைவர்கள் உட்பட அழுக்காறு கொள்ளக் காரணமாகும். அவர் தங்களைவிடப் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டால் தங்கள் பெயரும்,.புகழும் வீழ்ச்சியடையும் எனப் பயந்தார்கள். அவர் படுகொலை செய்யப்பட்டபோது உள்ளுர மகிழ்ந்தார்கள் என்பதை அன்றைய காலச் சூழ்நிலை பாபாவின் அபிமானிகளுக்கு உணர்த்தியது.

டாக்டர் பழனிபாபாவின் பன்முக அறிவை,ஆற்றலை,ஆளுமையை தமிழக முஸ்லிம் சமுதாயம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.அவர் எந்த மதத்தையும் தனிப்பட்ட முறையில் அழிவாக விமர்சித்ததில்லை.

"பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு!"

"முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வாங்காதே!"

"துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியைக் கட்டு!"

என்பன போன்ற முஸ்லிம் துவேஷப் பிரசாரங்களைக் கண்டு வெகுண்டெழுந்தார் பாபா.இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாறுமாறாக விமர்சித்தவர்களுக்கு மட்டுமே அவர்சிம்மசொப்பனமாக மாறினார். இஸ்லாத்தை அறிவுபூர்வாமாக எதிரிகள் விமர்சிக்கததால் மற்ற மதங்களின் அவலங்களை, முரண்களை, மூட நம்பிக்கைகளை விமர்சிக்கும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதே உண்மை. அவரது 'இராமகோபாலய்யருக்கு மறுப்பு' எனும் நூலே அதற்குச் சாட்சி.

பா.ம.க. கட்சியின் மேல் முஸ்லிம்களுக்கு ஓர் ஆதங்கம் உண்டு. பாபாவால் வளர்ந்தவர்கள்; கட்சிக்கு ஓர் பொதுஜன அங்கீகாரம் பெற்றவர்கள். அவர் கொலையுண்டபோது வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகள் தூக்குமேடை ஏற்ற முயற்சிக்காமல் கைவிட்டதுதான் மன்னிக்க முடியாதது. பின்னாளில் பாபாவின் மேல் பொறாமை கொண்ட அரசியல்வாதிகளின் பட்டியலில் டாக்டர் ராமதாஸூம் சேர்ந்துவிட்டது தான் கொடுமையும், நன்றிகெட்டத்தனமுமாகும்.

தனது வருமானத்தின் பெரும்பகுதியை பாபா.தான் சார்ந்த முஸ்லிம் சமுதாயத்திற்காகவே செலவழித்தார். பள்ளிவாசல் கட்டவும், புனரமைக்கவும், ஏழை மக்களுக்கு பொருளுதவி சட்ட உதவி செய்வதற்கும் தண்ணீர் போல் செலவழித்தார். அவர் தனக்கு என்று எதுவுமே சேர்த்துக் கொள்ளாதவர்.

1985 - 86 களில் அறந்தாங்கி நகரில் சில கலம் நான் வசித்த போது, அங்குள்ள முஸ்லிம் வாலிபர்கள் பாபாவின் கூட்டம் போட விரும்பியதால், அவர்களுடன் கோபிச்செட்டிபாளையம் சென்று பாபாவைச் சந்தித்தோம். எந்தவித பந்தாவுமின்றி பழகினார்; பேசினார். ஒருநாள் முழுவதும் தங்கி இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை; பசியே எடுக்கவில்லை. அவ்வளவு விபரங்கள் அவர் பேச்சில் கேட்டு பரவசமடைந்தோம். அவரது அறிவுக்கூர்மையை நேரில் கண்டோம்.

அவரது எளிமை எங்களைக் கவர்ந்தது,தினமும் பாபாவின் பல்வேறு உதவிகள் பெறவும் ஏழை எளிய பிற்பட்ட மக்கள் வந்த வண்ணமிருந்தனர். காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் பல நண்பர்களிடமிருந்தும் போன் கால்கள் வந்தவண்ணமிருந்தன. ஒரு பள்ளிவாசலுக்கு மைக் ஆம்பிளிபேர் பரிசாக வழங்கிய நிகழ்ச்சியில் எங்களையும் அழைத்துச் சென்றார். துப்பாக்கி வைத்திருந்தார். அதனை எங்களுக்குச் சுட்டுக் காட்டினார்.எங்களில் சிலர் பயந்தோம்.மிகவும் பாதுகாப்புடன் இருக்கும் பாபா, எங்ஙனம் கொலையுண்டார் என்பதை இன்றளவும் என்னால் நம்ப முடியவில்ல.

எங்களுக்குத் தேதி தந்தபடி, வந்து இரவு 9 மணிக்குப் பேசினார். இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டுவிட்ட காலம்.அவரது அநீதியான அரசியலை பெட்டியிலிருந்து ஆதாரங்களை எடுத்து வைத்து ஆணித்தரமாக விளாசினார். மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசினார்.

அவர் பேசும் உண்மைகள்,காவல்துறை அதிகாரிகளைச் சுடும்;நேர்மையற்ற அரசியல்வாதிகளையும் சுடும்;நீதிபதிகளின் தீர்ப்பும் தப்பாது.சொல்லி வைத்தாற்போல அதிகாலையில் புதுக்கோட்டை எல்லையில் பாபா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தோம். அவரது துணிச்சலை, வீரப்பாய்ச்சலை நினைத்தால் இன்றும் நடுக்கம்தான். ஆனால், வழக்குகளெல்லாம் அவருக்கு ஒரு தூசு!

இன்றைய முஸ்லிம் இயக்கங்களுக்கு 'பாபா தான் முன்னோடி' என்பதை பழையபடி ஆதரிக்கின்றேன். அவரது ஏடுகளான 'அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி' ஆகியவற்றில் அவரது பேனா முனையை இன்று படித்தாலும் அதனை விளங்கலாம்.அவ்விதழ்கள் இன்றும் என்னுடன் உள்ளன. ஷாநவாஸ் கூறுவது சத்தியமான உண்மை.பாபா இன்று உயிருடன் இருந்தால் ஜிஹாத் கமிட்டிக்கு மேலாக எந்த இயக்கமும் குப்பை கொட்ட முடியாது. தமுமுக., தவ்ஹித் ஜமாஅத் தோன்றியும் இருக்காது.

அவரது வாதத்திறமைக்கு முன்னால் எந்தக் கொம்பனாலும் பதிலளிக்க முடியாது.அவரது சட்ட நுணுக்கங்களுக்கு முன்னால் எப்படிபட்ட வக்கீலானாலும், காவல்துறை அதிகாரியானாலும் சமாளிக்க முடியாது. அந்த வீறுகொண்ட வேங்கையின் அதிவேகப் பாய்ச்சலுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.

கோவில்களைப் புனரமைக்கவும்,பூஜை புனஸ்காரங்கள் செய்யவும் முதல்வராக இருந்த ஜெயலலிதா நிதி வசூலித்தார். அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆணை போட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் பழனிபாபா.இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்,மேற்படி நிதிக்காக ரூபாய் 5 லட்சத்தை ஜெயலலிதாவிடம் வழங்கி,'ஷிர்க்'காண காரியத்திற்கு வங்கிப் பணத்தை எடுத்து வழங்கியதைக் குறிப்பிட்டு,'இந்தியன் வங்கிகளை'ப் புறக்கணியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். எங்கள் பாபா.

பாபாவின் பிரசாரத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்த பிற மதச் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்,புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் பெயரும், விலாசமும் அவரது ஒவ்வொரு இதழிலும் வந்த வண்ணமிருக்கும்.

தமிழக கலவரங்களுக்கு பாபா தான் காரணம் என்று ஆளுங்கட்சியுடன் முஸ்லிம்லீகர்களும் பாடிய பல்லவியைக் கண்ட பாபா, 'நாகூர், ஆம்பூர், கோவை உட்பட தமிழகத்தின் எந்தப் பகுதியில் கலவரம் நடத்திருந்தாலும் அவற்றிற்கு நான் தான் காரணம் என்று யார் நிரூபித்தாலும் 10 லட்சம் தருவேன்' என்று தனது 'புனிதப்போராளி'யில் விளம்பரமே தந்தார். நாகூர் கலவரத்துக்கு பாபா காரணமல்ல என்று சென்னை உயர்நீதினம்றம் தீர்ப்பு எழுதி, அவரை விடுதலை செய்தது.

பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் தெளிவாக, துணிச்சலாக நேருவின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை பாபா. பிரதமர் நேரு பாபரி மஸ்ஜிதில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட கடவுள் சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி ஆணையிட்டும்,பணிய மறுத்த மாவட்ட நீதிபதி (கலெக்டர்) பைசாபாத் நய்யாரை உடனே நீக்கிவிட்டு,வேறு ஆளை நியமித்திருக்க வேன்டும்.சிலைகளை அப்புறப்படுட்த்தி முஸ்லிம்களின் தொழுகைக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.நேரு அதனைச் செய்யத் தவறியதால் 1949 முதல் கடந்த காலங்களில் சில லட்சம் முஸ்லிம்களின் உயிர்கள் பறிபோனதும்தான் மிச்சம் என்று அன்றே அம்பலப்படுத்தினார், பாபா.

மயிலாடுதுறை மாநாட்டில் 31.01.1993 அன்று , இனி டிசம்பர் 6 ஆம் தேதி பாபரி மஸ்ஜித் ஷஹீதானதை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கப்படும் என்று தீர்மானம் போட்டது தான் தமுமுக,தெளஹீத்வாதிகளால் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. "மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டினால் அதை குண்டு வைத்துத் தகர்க்க ஜிஹாத் கமிட்டி தீர்மானிக்கிறது" என்று மகா துணிச்சலுடன் தீர்மானம் போட்டவர், பாபா.

தன்னுடன் முரண்பட்ட ஸமது பார்ட்டியையும்,லத்தீப் பார்ட்டியையும் ஒன்றிணைத்து ஒரே இந்திய யூனியம் முஸ்லிம் லீக்காக இயங்க வேண்டும் என்று எழுதியும் பேசியும் பாடுபட்டவர் பாபா. RSSதடை செய்யப்பட்டபோது பேலன்ஸாக ஜமாஅத்தே இஸ்லாமியையும் தடை செய்ததை, தன்னுடன் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுத்ததுடன், தடையை நீக்க தீர்மானம் போட்டதுடன் ஜனாதிபதிக்கும் கடிதமும் எழுதினார், பாபா.

சாதாரணமாக பாபாவின் சுபாவம் அமைதியும்,அடக்கமும் குடிகொண்டது. இளகிய மனம்,யாரையும் பழிவாங்கியதில்லை,பரந்த அறிவுமிக்க நல்ல பண்பாளர்,பலருக்கும் உதவியாளர், ஜாதி மதம், இனம் கடந்த நண்பர்களுடனும் அறிவுஜீவிகளுடனும் தொடர்புகொண்டவர். யார் யாருக்கு அவர்களுக்கு தகுந்தபடி, பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற கலை, பழனிபாபா ஒருவருக்குத்தான் கை வந்ததாகும்.

சமுதாயம் மறந்துவிட்ட ஒரு முஸ்லிம் உலகப் போராளியை இஸ்லாமிய சேகுவாராவை,சிறந்த பண்பாளரை,தேர்ந்த அரசியல் வித்தகரை நினைவுக்கூர்ந்த ஓர் அம்சமே சமநிலை சமுதாயத்தை Top No1 இடத்தில் வைக்கப் போதுமானது. அவர் தம் மாண்புகளை இன்றைய தலைமுறை உணரச் செய்தமைக்கு நன்றி.

பழனிபாபா போன்ற ஓர் அறிவாளி, அஞ்சாநெஞ்சன், வீர வேங்கை மீண்டும் பிறக்க அல்லாஹ்விடம் ஆதரவு வைப்போம்.நாடு முழுவதும் குண்டுவைத்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்துக்கொண்டும் கும்மாளம் போடும் இன்றைய நரித்தன அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஈடுகொடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை, உண்மைகளை ஓங்கி உரைக்கவும் துணிவுடன் பேசவும் எழுதவும் பழனிபாபா இல்லாமல் போய்விட்டாரே என்கிற ஏக்கம் இன்றும் என்னைப் போன்றவர்களின் உள்ளங்களை வருத்தி வருகிறது.

பாபா வாழ்ந்த காலம் வரை கீழ்க்கண்ட சாதனைக்கு அவர் மட்டுமே சொந்தக்காரர்.

இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர்.

அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணி திரட்டியவர்.

சட்டரீதியான சவால்களைச் சந்திக்க ஒடுக்கப்பட்ட மக்களைத் தயார்படுத்தியவர்.

தடா வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய இயலாத இந்தியாவின் ஒரே மனிதர்.

இஸ்லாமிய மக்களின் பிரச்சினைக்காக 100க்கும் மேற்பட்ட முறை அரசால் கைது செய்யப்பட்டவர்.

இறுதியில் இஸ்லாமியர் - ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக த உயிரையே தியாகமும் செய்துவிட்டார்.

-நன்றி ஹாஜி ப.சையத் அஹ்மத், கொள்ளிடம்
-நன்றி சமநிலைச் சமுதாயம் மார்ச் 2011

0 comments: