சென்னை : புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் முன்பு போல் இனி திருட்டுதனமாக பேச வேண்டியதில்லை. அதிகாரபூர்வமாகவே அவர்கள் பேசுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்து உள்ளது. ஆம் விரைவில் டெலிபோன் பூத்துகள் சிறைகளில் அமைக்கப்பட உள்ளன.
புழல், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 சிறைச்சாலைகளுக்கு இவ்வசதி முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. டெலிபோன் பூத்துகள் அமைப்பதற்காக 1 கோடியே 58 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி மேல் திருட்டுத்தனமாக செல்போன்கள் சிறைகளுக்கு கடத்தப்படுவதும் அது தொடர்பான ஊழல் மற்றும் குற்றங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் அமலுக்கு வந்த பின் சிறை கைதிகள் சிறைசாலை அதிகாரிகளிடம் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் இரு தொலைபேசி எண்களை கொடுத்து அவ்வெண்களை தொடர்பு கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 3 தடவையும் 30 நிமிடங்கள் வரையும் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவறாக உபயோகித்தால் இவ்வசதி அக்கைதியிடமிருந்து திரும்ப பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment