வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Sunday 8 April 2012

ஒளிராத இந்தியாவும் அன்னா ஹசாரேவும் - முத்து கிருஷ்ணன்


நேற்று குவைத்தில் உள்ள பஹாஹீல் பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் சமூக போராளியும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன் அவர்களின் "நஞ்சாகும் நீதி" எனும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். முத்து கிருஷ்ணன் குறித்து இந்நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான வாசகர் கடிதம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

புத்தக வெளியீடு, அதற்கான விமர்சனம், வாழ்த்துரை எல்லாம் முடிந்த பிறகு முத்துகிருஷ்ணன் பேசியதிலிருந்து சில முக்கிய குறிப்புகளை தொகுத்து தருகிறேன். வெள்ளி அன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பலஸ்தீன பயணம் குறித்து இரண்டு மணி நேரம் பேசியுள்ளார் என்பதை கலந்து கொண்டவர்கள் சொன்னார்கள். விளம்பரம் இல்லையென்றாலும் சுமார் நூறு நபர்கள் கலந்து கொண்டனர்.

1. இது வரை தன்னுடைய எப்புத்தகத்துக்கும் புத்தகவிழா நடத்தியதில்லை என்றும் தன்னை பாராட்டும் அளவு தான் எதையும் செய்யவில்லை என்றும் தன்னுடைய கடமையையே தான் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

2.  இந்தியா வல்லரசு என்று கணவு காணும் அதே வேளையில் தான் நேரில் கிராமங்களில் பார்த்த இந்தியாவுக்கும் ஊடகங்கள் சொல்லும் இந்தியாவுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

3.  மஹாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் 10 வருடங்களில் 2.5 இலட்சம் விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை பூச்சி மருந்துகளை அடித்து விவசாயம் பொய்த்து தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை சொன்னார். இந்திய ஊடகங்களிலேயே கிராமபுற நிலவரங்களை கவனிப்பதற்காக சிறப்பு எடிட்டரை ஹிந்து பத்திரிகை வைத்துள்ளதாகவும் அதன் சிறப்பு எடிட்டர் சாய்நாத் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்ற தகவலையும் தந்தார்.

4. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் விரிவாக்க பணிகளுக்காக அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை சொன்னார்.

5.  குஜராத்தில் கோத்ராவில் 68 நபர்கள் கொல்லப்பட்டதற்கு "அவர்கள் ஒரு தின போட்டியை நடத்தினார்கள். நாம் டெஸ்ட் போட்டிகளை நடத்துவோம்" என்று கூறி 2000 முஸ்லீம்களை மோடி கொன்றதை ஆதாரத்துடன் கூறினார்.

6. சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதாக கூறி அங்குள்ள 5 இலட்சம் மக்களை வெளியேற்றி 36,000 ஏக்கர் நிலங்களை சுவராஜ் பால் போன்ற பண முதலைகளிடம் கனிம வளங்களை சுரண்ட கொடுத்த அரசியலையும், பழங்குடி மக்களை கொண்டே அவர்களை கொல்ல சிறப்பு படைகளை உருவாக்கிய மக்கள் விரோத அரசியலையும் படம் பிடித்து காட்டினார்.

7.  இந்தியா சுதந்திரம் அடையும் வரை வெள்ளைக்காரனுக்கும் அடிமையாகாமல் இருந்த ஹைதரபாத் நிஜாமை படை பலத்தை கொண்டு ஆந்திராவை இந்தியாவுடன் இணைத்ததையும் தெலுங்கானா மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதாலேயே தனித் தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளாக சொன்னார்.

8.   11 ஆண்டுகளாக சோற்றை பிசைந்து கொண்டு தன் மகளுக்கு சோறு ஊட்ட ஆவலோடு காத்து நிற்கும் மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவின் தாயாரின் கண்ணீர் கதையையும் விவரிக்கவே முடியாத காஷ்மீரின் சோகங்களையும் பட்டியலிட்டார்.

9. கூடங்குளத்தில் போராடும் 10,000 பொதுமக்களை 8,000 காவல்துறை கொண்டு அடக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை சாடிய முத்துகிருஷ்ணன்  நகரங்கள் கொழுப்பதற்காக கிராமங்களை இந்தியா ஒளிராமலேயே வைத்து கொன்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். 2 கேரள மீனவர்கள் இத்தாலிய மீனவர்களால் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என்று சொன்ன ஊடகங்களில் இலங்கையால் கொல்லப்பட்ட 547 தமிழக மீனவர்களை பற்றி கொஞ்சமும் கவலை படவில்லை என்றார்.

10. அன்னா ஹசாரே பற்றிய கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த முத்துகிருஷ்ணன் 64 கோடி போபர்ஸுக்கு பதறிய நாம் இன்று 1.75 இலட்சம் கோடியை குறித்து கவலைப்படாததற்கு காரணம் கார்பரேட்டுகள் என்று குறிப்பிட்டவர் அத்தகைய கார்பரேட்கள் ஆதரவோடு ஊழலை ஒழிக்க நினைப்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார். விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட 2.5 இலட்சம் விவசாயிகளை பற்றி கவலை கொள்ளாத ஊடகங்கள் ஐ.பி.எல்ல்லுக்கு இணையாக அன்னாவுக்கு லைவ் கவரேஜ் கொடுத்தது அவரின் நம்பகத்தன்மையை இன்னும் கேள்விக்குறியாக்கியது என்றார்.

11.  அன்னா ஹசாரேவின் கிராமத்திற்கு தாம் சென்றதாகவும் அங்கு எவ்வித ஜனநாயக மாண்புகளும் இல்லாமல் அன்னாவின் சர்வதிகாரம் கொடி கட்டி பறப்பதாகவும் இன்று வரை ஒரு கிறிஸ்தவர் அல்லது ஒரு முஸ்லீமையும் தன் கிராமத்தில் குடியேற அன்னா அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் சொன்ன முத்துகிருஷ்ணன் இடஒதுக்கீடு விஷயத்திலும் அன்னாவின் நிலைப்பாட்டை தோலுரித்து காட்டினார். உதயகுமார் அமெரிக்காவில் பணிபுரிந்த போது ஹிந்து ராம் உள்ளிட்ட சுமார் 20 அறிவு ஜீவிகளை அமெரிக்காவுக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தியதை இன்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்றும் இத்தகைய அரசு அடக்குமுறைக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடுவேன் என்றும் முத்துகிருஷ்ணன் கூறினார்.

0 comments: