அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
அன்பிற்கினிய நமதூர் உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் .....
A.K தாஜுதீன் பேட்டியை வெளியிடுவது சம்பந்தமாக
ஜமாத் சார்பான அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற முறையிலும் வெற்றிபெற்ற அணியை வழிநடத்தியவர் என்ற முறையிலும் A.K தாஜுதீன் அவர்களுடைய பேட்டியை வெளியிட்டுருக்கிறேன்.
அதுபோலவே அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளருடைய பேட்டியையும் வெளியிட்டிருக்கின்றேன். யார் வெற்றிபெற்றிருந்தாலும் வெற்றிபெற்றவர்களின் பேட்டியை வெளியிட்டிருப்பேன். இதில் எந்த மாற்றுகருத்தும் எனக்கு கிடையாது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட்டதற்காக துபை மற்றும் சவுதி யிலிருந்து எனக்கு கால் செய்து பாராட்டு தெரிவித்த நமது வலைப்பூ பார்வையாளர்களுக்கு எனது நன்றியையும்(அல்ஹம்துலில்லாஹ்) சலாத்தினையும் தெரிவித்துகொள்கின்றேன்.(அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மாதுல்லாஹி வ பர்க்காத்துஹு)
இது நமதூருக்கான வலைப்பூ.இது அனைவரது கருத்துகளையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்ற நோக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் கருத்துக்கள் வெளியிடுவோர் உங்களது நிஜபெயர்களிலேயே கருத்துக்களை வெளியிடலாம்.அப்போதுதான் நமக்குள் கருத்துபரிமாற்றங்கள் ஏற்பட்டு ஒரு ஒற்றுமை வட்டத்துக்குள் வரமுடியும். அப்போதுதான் நானும் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே இந்த வலைப்பூவை தொடர்ந்து நடத்த ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் என்றும் நம்புகிறேன்.
(R.M.S ரஹ்மான்கான் அப்துல் ரஹ்மான் ஷேக் S ,K.M.H ஷேக்,மல்லிகைபுதல்வன் ஆகிய ஒரு சிலர் மட்டுமே தங்களது பெயர்களில் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு மிக்க நன்றி )
ஏனெனில் நம் ஊரை சேர்ந்த அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களே.அதுவும் ரத்த உறவுகள்.
இடையில் சிற்சில கருத்து வேறுபாடுகள் சரியான புரிதல் இல்லாமை போன்ற சாதாரண விஷயங்களினால் ஏற்பட்ட குரோதங்கள் விரோதங்கள் களைந்து ஒன்றுபட்ட ஒருமித்த கருத்துக்கு வரமுடியும் என்றும் உறுதியாக நம்புகின்றேன்.
அது போல் உங்களுடைய பெயர்களிலேயே நீங்கள் கட்டுரைகள் வெளியிட்டால் விருப்பு வெறுப்பின்றி வெளியிட நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். nijam802@gmail.com என்ற ID க்கு அனுப்பவும்.
மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை பொறுத்தே நான் இந்த வலைப்பூவை தொடர்வதா வேண்டாமா என்று தீர்மானிக்கும்.
11 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமென்ட் போடுகின்றேன்.காரணம் வேலை பளு தான்.ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த வலைதளத்திற்கு வந்து நமது ஊர் செய்திகளை பார்த்து விட்டு செல்கின்றேன்.முக்கியமாக ஊராட்சி மன்ற தேர்தலின் நமது ஊர் வேட்பாளர்களின் செய்திகளை அவ்வபோது வெளீட்டு அயல் நாட்டில் வாழும் எங்களுக்கு எல்லாம் பயனாக இருந்தது.வாழ்த்துக்கள் .உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் உரு துணையாக இருப்பான் ஆமீன் .
தங்களின் மேல் சில சகோதரர்கள் வருத்தமாக உள்ளார்கள். என்னவென்றால் புதுப்பட்டின பிரச்சனையை நமது வலைபூவில் சரியான முறையில் வெளியிடவில்லை.முக்கியமாக காவல் நிலையம் முற்றுகையை அந்த வீடியோ காட்சிகளை தாங்கள் வலை தளத்தில் வெளியிடவில்லை .அது தான் காரணம் கமெண்ட்ஸ் குறைந்ததற்கு .
புதுப்பட்டினம் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடந்த போது நான் என்னுடைய வேலை பளு காரணமாக பட்டுக்கோட்டை வந்துவிட்டேன். என்னுடைய நண்பனிடம் வீடியோ எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வந்தேன். ஆனால் அவர் சரியாக செய்யவில்லை. இது தான் காரணம். வேறு ஒண்டுமில்லை
ஒருவரைப் பற்றி கேள்வி எழுப்பும்போது, அவரைப்பற்றி அவர் சேவைகள் தியாகங்களைபற்றி விவரித்து விரிவான ஒரு பதிவினை கொடுக்கவேண்டும். அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களை அனுமதிக்கவேண்டும்
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு தாஜுதீன் அவர்களுடைய மிகச்சிறந்த திறமைதான் காரணம்.
A.K தாஜுதீன் மட்டும் நமதூரூக்கு கிடைதிருக்காவிட்டால் டிரைவர் இல்லாத பஸ் மாரி நம்ம நெலம ஆயிருக்கும்.
இந்த ஒப்பந்தம் ஜெயித்திருக்காவிட்டால் பஞ்சாயத் போர்டு ஆபீசில் ஒரு முஸ்லிம் வந்து பஞ்சாயத்து தலைவராகவோ கவுஞ்சிலராகவோ ஒருக்காலும் வரமுடியாது. நீங்கள் எந்த கணக்கு போட்டாலும் சரி.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி தாசுதீனுக்கு மட்டுமே உண்டு என்பதை அவருடைய அரசால் மற்றும் குடும்ப எதிரிகள் கூட ஒத்துக்கொள்ள்வார்கள். நிச்சயமாக அவர் மீது எந்த வித குற்ற சாட்டும் யாரும் சுமத்த முடியாது.
அவர் தெளிவான மனிதர். அரசியல் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல அவருக்கு மட்டுமே உண்டு .சமீபத்தில் அவர் நகர்த்திய காய்கள் நினைவிருக்கலாம்.
நமதூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரச்னை என்று யார் அணுகினாலும் தீர்வு கிடைக்கும் ஆற்றல நமது சுற்று வட்டாரத்தில் தசுதீனுக்கு மட்டுமே உண்டு. சமீபத்தில் நடந்த தேர்தல் தினத்துக்கு முதல் நாள் குற்ற செயல் சம்பந்தமாக மாட்டிகொண்ட ஒருவரை இவர் காப்பாத்தி விட்டது ஊரறிந்த ரகசியம்.
இன்னும் நிறைய சொல்லலாம் . மூச்சு முட்டுது G.
சலம்,
அண்ணன் நிஜாம் அவர்களின் விமர்சனத்துக்கு மிக்க நன்றி.
என் பாசத்துக்குரிய நெத்திலி மீனே தங்களின் விமர்சனம் மிக அழஹாவும் நேர்த்தியாவும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
அதே நேரத்தில் மதிப்பிற்குரிய தாஜுதீன் அவர்களின் புகழை பாராட்டி கொடுதுல்லிர்கள் அதுவும் ஓகே தான், அனால் நீங்கள் அவருடைய ரத்த சொந்தமாக இருந்து இப்படிலாம் புகழ கூடாதுன்னு இஸ்லாம் சொல்லுதுன்னு இங்கே பரவலா பேசுறாங்க அப்படி புகழ்ந்தால் அது ஏற்புடையது அல்ல என்றும் பேசுறாங்க, எனவே என் பாசத்துக்குரிய வாலமீனே அவருடைய புகழுக்கு பங்கம் விளைவிக்காமல் தாங்களின் முழுமையான முகவரியை தந்து நீங்களும் உண்மையானவருனு நிருபிபிங்கனு எல்லோரும் எதிபாற்குரங்க செய்விங்களா, செய்தால் மதிப்பிற்குரிய தாஜுதீன் புகழ் இன்னும் விண்ணை முட்டலாம்.
இப்படிக்கு ஆர் எம் எஸ் ரகுமான்கான்
சவுதி அரேபியா
அல்லாஹ் மட்டுமே உயர்ந்தவன் ஒரு சாதாரண மனிதரை வரம்பு மீறி புகழாதிர்.ஜனாப்A.K.தாஜுதின் அவர்கள் திறமையானவராக இருக்கலாம்.ஆனால்(A.K தாஜுதீன் மட்டும் நமதூரூக்கு கிடைதிருக்காவிட்டால் டிரைவர் இல்லாத பஸ் மாரி நம்ம நெலம ஆயிருக்கும்.) இது போல இனி உளராதிர்.பிறகு நெத்திலி தண்ணீரில் மட்டுமே கிடக்கும் -K.M.H.Sheik M.Sc(IT),M.Phil.,
ஒன்றுக்கும் உதவாத ஊமைத்தலைவர்களை உள்ளாட்சித்தேர்தலில், தேர்ந்தெடுக்க வேண்டாம் என ஒருவரைத் தாக்கி இந்த வெப் சைட்டின் முதல் பக்கத்தில், வாசகமிட்ட அண்ணன் நிஜாம் அவர்கள், தான் அங்கம் வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜமாஅத் நிர்வாகத்தினரை, பொம்மைகளாக, ஊமைகளாக மக்களிடத்தில் காண்பிக்க வேண்டாம். அதற்கு, ஜமாஅத் நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் முன்னிலைப் படுத்த வேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள்.
Dear Mr.Nijam ethakkagavum kavalai vendam.sila kashttam varum sila nashtam varum,athai perithaaga ninaikka vendam,namathu oor website kandippaga vendum ean enill veli natill ullavargal mattrum veli ooril ullavargal paarppathaarkku vasathiyaga ullathu.ithai thodarnthu nadatthavaum.insha allah mallippattinam kandippaga maattram adaium.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாம் அனைவர் மீதும் இறைவனின் சந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
பகுதி ஓன்று :
இந்த வலைத்தளத்தை தொடங்கி வெளிநாட்டில் வாழும் மல்லிப்பட்டினம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைத்துக்கொடுத்த சகோதரர் நிஜாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பணிகளை மென்மேலும் அல்லாஹ்வின் உதவியால் சிறக்கவேண்டும் என்று வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ஆமீன்.
இவ்விடம் சிலரின் விமர்சனங்களை நான் படித்துப் பார்த்தபோது சிரிப்பதா, இல்லை சிந்தித்து சிணுங்கிக்கொண்டு அழுவதா? என்பது எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் வேடிக்கையாக இருக்கிறது. இவ்விடம் சிலர் ஒருவரைமட்டும் மையப்படுத்தி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது அவரின் இணைப்பிரியாத உறவில் வாழ்பவராக இருப்பார்ரோ என்கிற சந்தேகம் நம்மை குழப்புகிறது.
ஏன் நண்றி மறந்தவர்களா இருக்கிறீர்கள். அல்லாஹ் நாம் அனைவரையும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். A.K. தாஜுதீன் இல்லைஎன்றால் மல்லிப்பட்டினம் அழிந்துவிடுமா? மல்லிப்பட்டினத்திற்கு A.K. தாஜுதீன் இல்லாததும், வாகனத்திற்கும் ஓட்டுனர் இல்லாததும் ஒன்றா? என்ன பேதைத்தனமான (முட்டாள்) பேச்சாக இருக்கிறது. சிந்தித்துத்தான் பேசுகிறீர்களா? இல்லை ஏதோ பேசுகிறோம் என்று பேசுகிறீர்களா? ஒன்றுமே புரியவில்லை.
சில ஆண்டுகளுக்குமுன் மல்லிப்பட்டினம் முஸ்லிம் தெருவிற்கும், கரையூர் தெருவிற்கும் ஆர்ச் கட்டுவது தொடர்பாக பிரச்னைகள் நடந்துகொண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்த சமயம் மறைந்த சகோதரர் சத்தார் அவர்கள்கரையூர் தெரு பஞ்சாயத்திடம் சில தொகையை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படவில்லையா? அன்று இவர் மறுத்திருந்தால் மில்ரோடில் ஆர்ச் வந்திருக்காது என்னருமை சகோதரர்களே. மறைந்த சகோ. சத்தார் முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்லது எந்தளவிற்கு செய்திருக்கிறாரோ அந்தளவிற்கு கெடுதலும் பண்ணியிருக்கிறார். எல்லாப்புகழும் வல்ல இறைவன் அல்லாஹ் நன்கு அறிவான். அப்போ இவரும் A.K. தாஜுதீனைப் போன்றவர்தானே. ஏன் இன்றுமட்டும் உங்கள் வாகனம் ஓடிக்கொண்டு இருக்கிறது. சொல்லுங்கள் நண்பர்களே.
யாரும் யாரிடமும் தனிப்பட்ட முறையில் வெறுப்புகள் இல்லை. பொதுப்பிரச்னைகள் என்று வரும்போது நல்லவன்கூட கெட்டவனாகி விடுகிறான் என்பது இயல்பு. ஆனால் சிலர் தங்களது சுயலாபத்திற்காக ஜமாத்தை கூறுப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நிஜம். அந்தவகையில் சகோதரர் A.K. தாஜுதீனும் ஒருவரும் இருக்கிறார் என்பது உங்களால் மறுக்கமுடியாத உண்மை. இவர்தான் மல்லிப்பட்டினம் என்கிற பேருந்தை இயக்கும் ஓட்டுனர் என்று கூறுகிறீர்களே அப்படிஎன்றால் ஏற்கனேவே ஜமாத்தை சீர்படுத்தி இருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை. மீண்டும் ஜமாத்திற்கு செலவினத்தை ஏற்படுத்தி எதற்காக தேர்தல் வைக்கவேண்டும்? ஊரை ஒற்றுமைப்படுத்தி நல்லவர்களை தேர்ந்தெடுத்து நிரவாத்தினரை நியமித்து இருக்கலாம் அல்லாவா? ஏன் இவர் செய்யவில்லை.
பகுதி இரண்டு
சில மாதங்களுக்கு முன்பு கடற்கரையில் இவருக்கும், இன்னும் சிலருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டதே? ஏன் அவர்களை காவல்நிலையத்திர்கு அனுப்பி காவல்துறை அதிகாரிகளால் அடிக்க சொன்னார் எதற்கு? இருவரும் ஒரே ஜமாத்தார்கள்தானே? இவர் நினைத்திருந்தால் பொறுத்துக்கொண்டு சமாதானம் செய்து கண்டித்து அனுப்பி இருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?
இன்னும் பலவிசயங்கள் ஆனால் வேண்டாம். உங்கள் ஒற்றுமையில் கறைபடியா வைக்கவிரும்பவில்லை. எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டுமாக ஆமீன்.
இரு சமுதாயத்தவர்கள் என்றுமே சமாதானமாக வாழ்வது மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் அதைத்தான் அனைவரும் விரும்புவதே. இரு சமுதாயத்திற்கும் ஒப்பந்தம் செய்தது எதற்கு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இதில் இவரின் சுயலாபமும் இருக்கிறது நண்பர்களே. வேண்டாம் விட்டுவிடுவோம். இவர் நினைத்தால் அரசியல் செல்வாக்கை சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இன்றைய காலத்தின் சூழ்நிலையால் யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்கள் எளிதாக சாதிக்க முடியும். மற்றும் அரசியல் கட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் எளிதாக சாதிக்கமுடியும். உங்களைப்போன்ற எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாரும் முன்வருவதில்லை. அப்படி வருபவர்களையும் வேண்டுமென்ற களங்கம் ஏற்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விடுகிறீர்கள். அதுவும் சிலரின் சுயநோக்கமே.
முஸ்லிம் வாக்கு மட்டுமே இருந்தால் இன்று ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பதவியை எளிதாக பெறலாம் ஆனால் உங்களிடம் ஒற்றுமை இல்லை. உங்களுக்குள்ளே பலபிரிவுகள். சொந்தங்களின் அடிப்படையில் வாழ்ந்தால் வெற்றிபெற முடியாது, ஊரின் நலம், ஒற்றுமை என்கிற கையிற்றை பிடித்துக் கொண்டு வாழ முயற்சி செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...வெற்றிப் பெறுவீர்கள்.
நான் எனது கருத்தை இங்கு பதிந்ததினால் எனக்கும், தாஜுதீனுக்கும் எவ்வித முரண்பாடுகளோ, சண்டைகளோ இல்லை ஆனால் தற்போது (நமதூரில்) மல்லிப்பட்டினத்தில் நடக்கிற விசயங்களை சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன்.
பேருந்தை ஓட்டுவதற்கு ஒருவரும் மட்டும் ஓட்டுனர் இல்லை. எண்ணற்ற திறமையான ஓட்டுனர்கள் மல்லிப்பட்டினத்தில் தற்போதும் இருக்கிறார்கள். தயவுசெய்து அவர்களையும் செயல்படுவதற்கு வழிவிடுங்கள். ஒருவரின் வசதியை வைத்து புகழாதீர்கள். அந்த வசதிக்குப் பின் பல களவுகள் இருக்கிறது என்பதை அல்லாஹ்வின் உதவியால் அறிந்துகொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்..!
ஆகவே நடந்தது நாந்தவையாக இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ் நடப்பது எல்லாம் நன்மையாக நடக்கவேண்டும் என்று வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக...ஆமீன்.
Post a Comment