மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Wednesday, 14 November 2012
நடிகர் விஜய் வீடு முற்றுகை – 200 பேர் கைது!
தீபாவளியன்று வெளிவந்த நடிகர் விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லீம் சமூகம் குறித்த தவறான கருத்துக்கள் கூறப் பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. தேசிய லீக் சேர்ந்தவர்கள் விஜயின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
துப்பாக்கிப் படத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பால் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப் பட்டது. இந்நிலையில் நடிகர் விஜயின் வீட்டை முற்றுகையிட முயன்றதாக தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அன்சாரி நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரனை தொடர்பு கொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது .

Thursday, 25 October 2012
Wednesday, 17 October 2012
SDPI மது ஒழிப்பு ஆர்பாட்டம்
பட்டுக்கோட்டையில் இன்று காலை10:30 மணிக்கு SDPI யினர் மணிக்கூண்டிளிருந்து தாலுகா ஆபிஸ் வரை பேரணியாக சென்றனர் .
பின்னர் தாலுகா ஆபிஸ் முன்பு "மக்களை அழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு" என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர் .
இந்த ஆர்பாட்டம் தடையை மீறி நடத்தப்பட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் 4 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Thursday, 11 October 2012
தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தமிழோசையின் சிறப்பு பதிவு
தமிழக முஸ்லிம்களுடைய சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணங்களிலும் அலசும் பிபிசி தமிழோசையின் சிறப்பு பெட்டகத் தொடர். இத்தொடரைத் தயாரித்து வழங்குபவர் பிபிசி சென்னை நிருபர் த.நா.கோபாலன்
இந்த தொடரில் P.ஜைனுலாபிதீன், S.M பாக்கர், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ,பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள், நாகூர் ஹனீபா , பாத்திமா முஸாபர், தந்தை பெரியார், மற்றும் கோயமுத்தூர் முஸ்லிம்களின் பேட்டி ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் வாழ்வியலை கூறுகிறது பி.பி.சி
பாகம் 1--8
பாகம்-- 9
பாகம்-- 10
Tuesday, 25 September 2012
சகோ. தமீம் அன்சாரி கைது - உண்மை அறியும் குழுவின் அறிக்கை
தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை
செப்டம்பர் 24, 2012, திருச்சி
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.
“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.
எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை, 2.
2.கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி, 3.
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி, 4.
4.பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம், 5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி, 6. 6.வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.
இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..
நாங்கள் அறிந்த உண்மைகள்
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.
தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.
16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார்.
சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.
கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்
1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?
2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.
5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.
6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.
‘கியூ’ பிரிவு போலீஸ்
கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.
உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.
காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
எமது கோரிக்கைகள்
1.முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
2.‘கியூ’பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும்.
3. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.
4.அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை – 600 020. செல்: 9444120582

Friday, 21 September 2012
மல்லிபட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
அமெரிக்க யூதன் நக்கோலா பசிலி நக்கோலா என்பவனை கைது செய்து அவன் தயாரித்த படத்தை தடை செய்ய கோரியும் அமெரிக்க அரசுமுஸ்லிம்களிடத்தில் மன்னிப்பு கேட்க கோரியும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களை அழைத்து கடும் கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்ய கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரிடம் தமிழக அரசு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ய வலியுறுத்தியும் மல்லிபட்டினம் முஸ்லிம்கள் சார்பில் 21/09/2012அன்று மல்லிபட்டினம் கடை வீதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு அமெரிக்கவிற்கெதிரான கோஷங்களை எழுப்பியும் ஒபாமாவின் கொடும்பாவியை எரித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Friday, 14 September 2012
Wednesday, 12 September 2012
அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?
“அசாமியர்களைக் காப்பாற்று.பாரதக் குடிமக்களாகிய போடோக்களைக் காப்பாற்று. வங்கதேச ஊடுருவல்காரர்களை வெளியேற்று. அசாமியர்களின் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துவருகின்ற வங்கதேச முஸ்லீம்களை வெளியேற்று”
மேற்கண்ட முழக்கங்களோடு ஆர்பாட்டம் ஒன்றை ஆகஸ்ட் 21ம் தேதியன்று விஷ்வ ஹிந்து பரிசத் என்கிற சங்கப்பரிவார அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு ‘தேசபக்தர்களை’ அணிதிரளக் கோரி ஒரு துண்டறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி துண்டறிக்கையில், “பங்களா தேசத்தவர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா?” என்றும், “பாகிஸ்தானியர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி சௌதி அரேபியாவுக்குள் நுழைய முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 3 கோடி வங்க தேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளாதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் அடித்துள்ள நோட்டீஸின் சாராம்சம் இது தான் – வங்கதேசத்திலிருந்து முசுலீம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைகிறார்கள்; இது சட்டவிரோதமானது. மேலும், இந்த வந்தேறிகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களை முசுலீம்கள் ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் ஆகும். இவை எப்பேர்பட்ட பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில வரலாற்று பின்னணிகளையும் புள்ளிவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
Table 1 | ||||||
Percentage Decadal Variation in Population since 1951 in India and Assam | ||||||
1951-61 | 1961-71 | 1971-81 | 1971-91 | 1991-01 | 01-2011 | |
India | 21.64 | 24.80 | 24.66 | 54.41 | 21.54 | 17.64 |
Assam | 34.98 | 34.95 | - | 53.26 | 18.92 | 16.93 |
Dhubri | 43.74 | 43.26 | - | 45.65 | 22.97 | 24.40 |
Dhemaji | 75.21 | 103.42 | - | 107.50 | 19.45 | 20.30 |
Karbi Anglong | 79.21 | 68.28 | - | 74.72 | 22.72 | 18.69 |
மேலே உள்ள புள்ளிவிவரத்தை கவனமாகப் பரிசீலித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவடையும். இந்தப் பட்டியலில், ஒவ்வொரு பத்தாண்டுகளில் அனைத்திந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம், அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் அதன் சில மாவட்டங்களில் வளர்ச்சி விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலவரம் நடந்து வரும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் துப்ரி மாவட்டம் தான் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான் வங்க மொழி பேசும் முசுலீம்களின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.
பட்டியலின் படி பார்த்தால், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு துப்ரி மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் விழுந்துள்ளது ( அதாவது, முசுலீம்களின் வளர்ச்சி விகிதம்) அதற்கு முன்பும், துப்ரி மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த காலத்திலேயே அசாமின் பிற மாவட்டங்களில் ‘இந்துக்களின்’ மக்கள் தொகை மிக அதிகளவிலான வளர்ச்சி நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக தெமாஜி மற்றும் கார்பி மாவட்டங்களின் வளர்ச்சியை துப்ரி மாவட்டத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.
அதே போல், இப்போது கலவரம் நடக்கும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 2001 – 2011 காலகட்டத்தில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியே 5.19 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவான அளவான 280 பேராக (சதுர கிலோமீட்டருக்கு) உள்ளது. மேலும் மக்கள் இம்மாவட்ட மக்கள் தொகையில் 20% அளவுக்கே முசுலீம்கள் உள்ளனர். இந்த விவரங்களில் இருந்தே முசுலீம்களால் பிரதேச அளவில் பெரியளவில் நெருக்கடி ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஆக, வங்கமொழி பேசும் முசுலீம்கள் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமிய நிலங்களை அக்கிரமிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது பச்சைப் பொய். ஆனால், அசாம் மாநிலத்தில் – குறிப்பாக துப்ரி மாவட்டத்தில் – வங்க மொழி பேசும் முசுலீம்கள் மக்கள் தொகை சதவீதத்தில் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்ன?
1826-ம் ஆண்டுக்கு முன்பு அசாம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இல்லை. அது அப்போது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதி எல்லைப்புற பிரதேசமாக இருந்தது. 1800களின் துவக்கத்தில் நடந்த ஆங்கிலோ – பர்மிய யுத்தத்தில் தோல்வியுறும் பர்மாவின் ஏவா அரசு ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகிறது – அது யெந்தபோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் படி, பர்மா காலனிய இந்தியாவிடம் விட்டுக் கொடுத்த நிலப்பகுதி தான் அசாம். அதாகப்பட்டது, பாரதமாதாவின் பீச்சாங்கையாக விளங்கும் நிலப்பகுதியே வேறு ஒரு நாட்டிடம் இருந்து அடித்துப் பறித்து ஒட்டவைக்கப்பட்டது தான்.
அதே காலகட்டத்தில் வெள்ளையர்கள் வங்காளப் பகுதியில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்குகிறது. பெருந்திரளான மக்கள் வெள்ளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்று வந்தனர். அதே நேரம் வெள்ளையர்கள் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன – ஆனால், அவற்றின் மூலம் நிலவருவாய் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களே வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை புதிய நிலப்பகுதியில் குடியேற ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் அசாமியப்பகுதியில் நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் துவங்குகிறார்கள்.
இப்படி புதிதாக குடியேறும் வங்காளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகரித்துச் சென்ற நிலையில், 1920-ம் ஆண்டு வாக்கில் வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், அதற்குள் கோல்பாரா, நாகாவ்ன், காமரூப் போன்ற மாவட்டங்களின் முசுலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களைத் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்று தூற்றுகிறது.
இத்தனைக்கும் இவர்கள் தேசப் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்த நாட்டையே நம்பி இதன் இறையாண்மையையே ஏற்றுக் கொண்டு இங்கே தங்கி விட்டவர்கள். அவர்கள் அசாமின் மொழி கலாச்சாரத்தை தமக்குள் வரித்தும் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முசுலீம்களின் மக்கள் தொகை சதவீதம் 74.29% அங்கே அசாம் மொழி பேசுபவர்கள் 70.09%. முசுலீம்கள் என்றாலே அவர்கள் நமது நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களென்றும் அவர்கள் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்களென்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் வழக்கமாக அவிழ்த்து விடும் பொய்களின் மேல் வங்காளதேச முசுலீம்கள் காறித் துப்பியிருக்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கலவரங்கள்?
இன்றைக்கு அசாமில் நடந்து வரும் கலவரங்களுக்கு சிக்கலான வரலாற்றுப் பின்னணி உள்ளது. இன்றைக்கு போடோக்களின் தரப்பாகவும் பார்ப்பன இந்து தேசியத்தின் தரப்பாகவும் முன்வைக்கப்படும் ‘வங்காளதேச முசுலீம் ஊடுருவல்காரர்களின்’ ஆக்கிரமிப்புகள் உண்டாக்கும் சமூக பொருளாதார நெருக்கடி என்பது முதன் முதலில் ‘அந்நியர்களுக்கு’ எதிரானதாகத் தான் துவங்கியது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டது வங்கதேச முசுலீம்கள் அல்ல வங்காள மொழி பேசும் இந்துக்கள் தாம்.
போலி சுந்தந்திரத்திற்குப் பின் அசாமின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது அசாமியர்கள் தான். அதே போல, ‘சுதந்திரத்தின்’ மூலம் கிடைத்து வந்த பலன்களை பெருமளவில் அனுபவித்து வந்ததும் நடுத்தர வர்க்க அசாமியர்கள் தான். அரசு வேலைகளிலும் மற்ற பிற சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்க மொழி பேசும் இந்துக்கள் எழுகிறார்கள். அசாமியர்களும் வங்காளிகளுக்கும் இடையிலான முதல் கலவரம் 1960-ல் நடக்கிறது – அது இரண்டு மொழி பேசும் ‘இந்துக்களுக்கு’ இடையில் நடந்த கலவரம்.
அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union/ AASU) ஆரம்பத்தில் நடத்திய ‘அசாம் இயக்கம்’ அதன் துவக்கத்தில் வங்காளதேச முசுலீம் ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக நடத்தப்பட்டதல்ல – அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் அளவிலான அதிராக வர்க்கத்தின் ஆதரவும் இருந்தது.
இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெறுகிறார்கள். 1974-ல் நடந்த கவுஹாத்தி முனிசிபல் தேர்தலில் முதன்முதலாக இடதுசாரிகள் வெற்றி பெருகிறார்கள். வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த முசுலீம்கள் மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அந்த சமயத்தில் எழுந்து வந்த இனவாதிகளுக்கு இப்போது ஒரு நெருக்கடி உண்டாகிறது; அதாவது, உள்ளூர் பழங்குடியினரையோ அல்லது மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடன் திகழும் பிரிவினரையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக வைத்திருப்பது ஆபத்துக்குரியதானது.
இந்த கட்டத்தில் தான் ‘அந்நியர்களுக்கு எதிராக’ என்பது ‘வங்கதேச முசுலீம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக’ என்று மாறுகிறது. இதன் தொடர்ச்சியாகத் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பிப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும் சுமார் 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவு குழந்தைகளும் பெண்களுமே இருந்தனர்.
1979 துவங்கி 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத ரணமாய் இருக்கிறது. வடகிழக்கில் உள்ளூர் அளவில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே இருந்துள்ளது. போடோ, குக்கி, மிசோ நாகா என்று வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே தீராத இனக்கலவரங்களை மூட்டி விட்டது இந்திய ஆளும் வர்க்கம் தான்.
போடோக்கள் மற்றும் அசாமியர்களின் தொடர்தாக்குதலுக்குள்ளான முசுலீம்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாயிரங்களில் பத்ருதீன் அஜ்மால் என்பவரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கீழ் அணிதிரளத் துவங்குகிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெருமுதலாளியான பத்ருத்தீன் அஜ்மால் தியோபந்த் எனும் அடிப்படைவாத இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்.
இரண்டாயிரங்களின் மத்தியில் அவ்வளவாகச் செல்லாக்கு இல்லாமலிருந்த இவரது கட்சி தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் முக்கியமான எதிர்கட்சி எனும் அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளது. காங்கிரசு மற்றும் பாரதியஜனதாவின் இந்துத்துவ வெறிக்கு பதிலடியாகத் துவங்கப்பட்ட இந்த அமைப்பும் இசுலாமியர்களை ஒரு முக்கியமான ஓட்டுவங்கியாக அணிதிரட்டியுள்ளது. தற்போது நடந்து வரும் கலவரங்கள் இந்த அணிசேர்க்கையை மேலும் உறுதிப்படுத்துவதோடு மக்களைக் கூர்மையாகப் பிளந்து எதிரெதிர் முகாம்களாக நிறுத்தியுள்ளது.
சுமார் நூறைம்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை என்பது இலங்கையின் மலையகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நிலைமையை ஒட்டியது தான். சிங்கள இனவாத பாசிஸ்டுகள் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் வங்காளி முசுலீம்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது ஏறக்குறைய ஒன்று தான்.
மட்டுமல்லாமல் அசாமிய தேசிய இனத்தைக் காக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் நோக்கமன்று – இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் இந்துக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி முசுலீம்களை அந்நியப்படுத்துவதும், வடகிழக்கில் ஓட்டுக்களை அள்ளுவதும் தான் உண்மையான நோக்கம். அகில இந்திய அளவில் இந்துக்களை பாசிச செயல்திட்டத்தின் கீழ் அணிதிரட்ட இவர்கள் பிரதேச அளவிலான உத்திகளைக் கையாள்கிறார்கள். உதாரணமாக, கருநாடகத்தில் கன்னடப் பெருமிதம், குஜராத்தி அஸ்மிதா, மராத்தி மானூஸ் போல அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிற்போக்கு நிலபிரபுத்துவ ஆதிக்கக் கருத்தியலை தங்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இவ்வாறு தயார்படுத்தப்படும் இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களோ மூளையற்ற வெற்று மண்டையோடுகளோடு தான் அலைகிறார்கள் என்பது சமீபத்தில் நிரூபணமானது. கடந்த 30ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை மாண்டியாவில் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி எனும் சங்கப்பரிவார அமைப்பின் குண்டர்கள், அதில் 89 தொழிலாளர்களை வெளியே இழுத்துப் போட்டு ‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இவர்கள்’ என்று கூச்சலிட்டபடியே அடித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் ராஜஸ்தான், உ.பி, பீகார், ஒரிசா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாம் – அதிலும் பலர் ‘இந்துக்கள்’.
இந்து பாசிசம் பொய்களையும் வதந்திகளையும் செயல்தந்திரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான் அவர்களைக் களத்தில் வீழ்த்த முடியும்.
தகவல் மூலங்கள் – கஃபிலா, அவுட்லுக் மற்றும் ஹிந்து நாளிதழ்
Saturday, 18 August 2012
ட்ராவல்ஸ் திறப்பு விழா
நமதூரை சேர்ந்த M.A.Kபஹுருதீன் அவர்களுடைய மகனார் சமிக் அவர்களால் சிறப்பான முறையில் சென்னை நுங்கம்ம்பாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கும் முகம்மது ட்ராவல்ஸின் சேவைகள்
*AIR TICKET
*TRAIN TICKET
*BUS TICKET
*CAR BOOKING
*VISA
*HOTEL ACCOMMODATION
*TOUR PACKAGES
*TRAVEL INSURANCE
*COURIER
*MONEY TRANSFER
MOHAMMED TRAVELS
அனைவரும் உங்கள் ஆதரவை தெரிவித்து இந்த ட்ராவல்ஸ் மென்மேலும் வளர துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .
MOHAMMED TRAVELS OLD NO.188. NEW NO.132 VALLUVARKOTTAM HIGH ROAD. NUNGAMBAKKAM. CHENNAI- 600034.
E-mail. mohammedtravels360@gmail.com
NEAR BY NUNGAMBAKKAM POLICE STATION OPOSITE BUILDING.
CELL. 9524428360
OFFICE. 044-43153039
B.MOHAMMED SHAMEEQ

Sunday, 22 July 2012
Monday, 9 July 2012
தடா வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய இயலாத இந்தியாவின் ஒரே மனிதர் - பழனிபாபா
விதையாய் விழுந்தவர் பழனிபாபா பற்றிய நினைவேந்தல் கட்டுரையை வாசித்து முடித்ததும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்!
பாபா பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டிய சில புதிய விஷயங்களைத் தந்தமைக்கு ஷாநவாஸ் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.வாலிப வயதில் இவ்வளவு விஷயங்களை எங்கிருந்து பெற்றார்.எழுதுவதற்கு எங்கிருந்து கற்றார் என வியந்தே போனேன்.பாபாவை ஒரு புதிராக பெரும்பாலான தமிழ் மக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் பட்சத்தில்,அவரது ஆளூமை பற்றிய அருமையான கட்டுரையை,உண்மை விளக்கத்தை இவர்போல் யாரும் இதுவரை வடிக்கவில்லை. எட்டுப் பக்கம் எழுதுமளவிற்கு குறுகிய காலத்தில் சாதனைகளை தனி மனிதனாக பாபா படைத்திருக்கிறார். எனில் மிகையல்ல. இஸ்லாத்தைப் பற்றி யார் என்ன சொன்னாலும், முஸ்லிம் சமுதாயத்தைச் சுற்றி என்னென்ன நடந்தாலும், அவ்வளவையும் கவனித்து, உள்வாங்கி நல்ல் ஞாபக சக்துயுடன் எழுத்தில் வெளிப்படுத்துவது சாதாரண காரியமல்ல.
ஏற்கனவே காயிதே மில்லத்-60 என்று அவர் வடித்த கட்டுரை ஹைலைட்டான ஒன்று. சல்மா பற்றியும், திருமா பற்றியும் எழுதியவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு நல்ல தீனி போட்ட கட்டுரைகள். காயிதே மில்லத் 60 கட்டுரையை என்னிடமிருந்து முஸ்லிம் லீக் கட்சித் தோழர்கள் பலர் 'ஜெராக்ஸ்' எடுத்துக் கொண்டார்கள் எனில், ஷாநவாஸின் எழுத்தாற்றலை ஊகித்துக் கொள்ளலாம்.
பாபாவின் பன்முக ஆற்றல்தான் அவர்கள் மீது தமிழல அரசியல்வாதிகள் - முஸ்லீம் லீக் தலைவர்கள் உட்பட அழுக்காறு கொள்ளக் காரணமாகும். அவர் தங்களைவிடப் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டால் தங்கள் பெயரும்,.புகழும் வீழ்ச்சியடையும் எனப் பயந்தார்கள். அவர் படுகொலை செய்யப்பட்டபோது உள்ளுர மகிழ்ந்தார்கள் என்பதை அன்றைய காலச் சூழ்நிலை பாபாவின் அபிமானிகளுக்கு உணர்த்தியது.
டாக்டர் பழனிபாபாவின் பன்முக அறிவை,ஆற்றலை,ஆளுமையை தமிழக முஸ்லிம் சமுதாயம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.அவர் எந்த மதத்தையும் தனிப்பட்ட முறையில் அழிவாக விமர்சித்ததில்லை.
"பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு!"
"முஸ்லிம் கடைகளில் சாமான்கள் வாங்காதே!"
"துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியைக் கட்டு!"
என்பன போன்ற முஸ்லிம் துவேஷப் பிரசாரங்களைக் கண்டு வெகுண்டெழுந்தார் பாபா.இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாறுமாறாக விமர்சித்தவர்களுக்கு மட்டுமே அவர்சிம்மசொப்பனமாக மாறினார். இஸ்லாத்தை அறிவுபூர்வாமாக எதிரிகள் விமர்சிக்கததால் மற்ற மதங்களின் அவலங்களை, முரண்களை, மூட நம்பிக்கைகளை விமர்சிக்கும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதே உண்மை. அவரது 'இராமகோபாலய்யருக்கு மறுப்பு' எனும் நூலே அதற்குச் சாட்சி.
பா.ம.க. கட்சியின் மேல் முஸ்லிம்களுக்கு ஓர் ஆதங்கம் உண்டு. பாபாவால் வளர்ந்தவர்கள்; கட்சிக்கு ஓர் பொதுஜன அங்கீகாரம் பெற்றவர்கள். அவர் கொலையுண்டபோது வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகள் தூக்குமேடை ஏற்ற முயற்சிக்காமல் கைவிட்டதுதான் மன்னிக்க முடியாதது. பின்னாளில் பாபாவின் மேல் பொறாமை கொண்ட அரசியல்வாதிகளின் பட்டியலில் டாக்டர் ராமதாஸூம் சேர்ந்துவிட்டது தான் கொடுமையும், நன்றிகெட்டத்தனமுமாகும்.
தனது வருமானத்தின் பெரும்பகுதியை பாபா.தான் சார்ந்த முஸ்லிம் சமுதாயத்திற்காகவே செலவழித்தார். பள்ளிவாசல் கட்டவும், புனரமைக்கவும், ஏழை மக்களுக்கு பொருளுதவி சட்ட உதவி செய்வதற்கும் தண்ணீர் போல் செலவழித்தார். அவர் தனக்கு என்று எதுவுமே சேர்த்துக் கொள்ளாதவர்.
1985 - 86 களில் அறந்தாங்கி நகரில் சில கலம் நான் வசித்த போது, அங்குள்ள முஸ்லிம் வாலிபர்கள் பாபாவின் கூட்டம் போட விரும்பியதால், அவர்களுடன் கோபிச்செட்டிபாளையம் சென்று பாபாவைச் சந்தித்தோம். எந்தவித பந்தாவுமின்றி பழகினார்; பேசினார். ஒருநாள் முழுவதும் தங்கி இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை; பசியே எடுக்கவில்லை. அவ்வளவு விபரங்கள் அவர் பேச்சில் கேட்டு பரவசமடைந்தோம். அவரது அறிவுக்கூர்மையை நேரில் கண்டோம்.
அவரது எளிமை எங்களைக் கவர்ந்தது,தினமும் பாபாவின் பல்வேறு உதவிகள் பெறவும் ஏழை எளிய பிற்பட்ட மக்கள் வந்த வண்ணமிருந்தனர். காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் பல நண்பர்களிடமிருந்தும் போன் கால்கள் வந்தவண்ணமிருந்தன. ஒரு பள்ளிவாசலுக்கு மைக் ஆம்பிளிபேர் பரிசாக வழங்கிய நிகழ்ச்சியில் எங்களையும் அழைத்துச் சென்றார். துப்பாக்கி வைத்திருந்தார். அதனை எங்களுக்குச் சுட்டுக் காட்டினார்.எங்களில் சிலர் பயந்தோம்.மிகவும் பாதுகாப்புடன் இருக்கும் பாபா, எங்ஙனம் கொலையுண்டார் என்பதை இன்றளவும் என்னால் நம்ப முடியவில்ல.
எங்களுக்குத் தேதி தந்தபடி, வந்து இரவு 9 மணிக்குப் பேசினார். இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டுவிட்ட காலம்.அவரது அநீதியான அரசியலை பெட்டியிலிருந்து ஆதாரங்களை எடுத்து வைத்து ஆணித்தரமாக விளாசினார். மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசினார்.
அவர் பேசும் உண்மைகள்,காவல்துறை அதிகாரிகளைச் சுடும்;நேர்மையற்ற அரசியல்வாதிகளையும் சுடும்;நீதிபதிகளின் தீர்ப்பும் தப்பாது.சொல்லி வைத்தாற்போல அதிகாலையில் புதுக்கோட்டை எல்லையில் பாபா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தோம். அவரது துணிச்சலை, வீரப்பாய்ச்சலை நினைத்தால் இன்றும் நடுக்கம்தான். ஆனால், வழக்குகளெல்லாம் அவருக்கு ஒரு தூசு!
இன்றைய முஸ்லிம் இயக்கங்களுக்கு 'பாபா தான் முன்னோடி' என்பதை பழையபடி ஆதரிக்கின்றேன். அவரது ஏடுகளான 'அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி' ஆகியவற்றில் அவரது பேனா முனையை இன்று படித்தாலும் அதனை விளங்கலாம்.அவ்விதழ்கள் இன்றும் என்னுடன் உள்ளன. ஷாநவாஸ் கூறுவது சத்தியமான உண்மை.பாபா இன்று உயிருடன் இருந்தால் ஜிஹாத் கமிட்டிக்கு மேலாக எந்த இயக்கமும் குப்பை கொட்ட முடியாது. தமுமுக., தவ்ஹித் ஜமாஅத் தோன்றியும் இருக்காது.
அவரது வாதத்திறமைக்கு முன்னால் எந்தக் கொம்பனாலும் பதிலளிக்க முடியாது.அவரது சட்ட நுணுக்கங்களுக்கு முன்னால் எப்படிபட்ட வக்கீலானாலும், காவல்துறை அதிகாரியானாலும் சமாளிக்க முடியாது. அந்த வீறுகொண்ட வேங்கையின் அதிவேகப் பாய்ச்சலுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.
கோவில்களைப் புனரமைக்கவும்,பூஜை புனஸ்காரங்கள் செய்யவும் முதல்வராக இருந்த ஜெயலலிதா நிதி வசூலித்தார். அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆணை போட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் பழனிபாபா.இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்,மேற்படி நிதிக்காக ரூபாய் 5 லட்சத்தை ஜெயலலிதாவிடம் வழங்கி,'ஷிர்க்'காண காரியத்திற்கு வங்கிப் பணத்தை எடுத்து வழங்கியதைக் குறிப்பிட்டு,'இந்தியன் வங்கிகளை'ப் புறக்கணியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். எங்கள் பாபா.
பாபாவின் பிரசாரத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்த பிற மதச் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்,புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் பெயரும், விலாசமும் அவரது ஒவ்வொரு இதழிலும் வந்த வண்ணமிருக்கும்.
தமிழக கலவரங்களுக்கு பாபா தான் காரணம் என்று ஆளுங்கட்சியுடன் முஸ்லிம்லீகர்களும் பாடிய பல்லவியைக் கண்ட பாபா, 'நாகூர், ஆம்பூர், கோவை உட்பட தமிழகத்தின் எந்தப் பகுதியில் கலவரம் நடத்திருந்தாலும் அவற்றிற்கு நான் தான் காரணம் என்று யார் நிரூபித்தாலும் 10 லட்சம் தருவேன்' என்று தனது 'புனிதப்போராளி'யில் விளம்பரமே தந்தார். நாகூர் கலவரத்துக்கு பாபா காரணமல்ல என்று சென்னை உயர்நீதினம்றம் தீர்ப்பு எழுதி, அவரை விடுதலை செய்தது.
பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் தெளிவாக, துணிச்சலாக நேருவின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை பாபா. பிரதமர் நேரு பாபரி மஸ்ஜிதில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட கடவுள் சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி ஆணையிட்டும்,பணிய மறுத்த மாவட்ட நீதிபதி (கலெக்டர்) பைசாபாத் நய்யாரை உடனே நீக்கிவிட்டு,வேறு ஆளை நியமித்திருக்க வேன்டும்.சிலைகளை அப்புறப்படுட்த்தி முஸ்லிம்களின் தொழுகைக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.நேரு அதனைச் செய்யத் தவறியதால் 1949 முதல் கடந்த காலங்களில் சில லட்சம் முஸ்லிம்களின் உயிர்கள் பறிபோனதும்தான் மிச்சம் என்று அன்றே அம்பலப்படுத்தினார், பாபா.
மயிலாடுதுறை மாநாட்டில் 31.01.1993 அன்று , இனி டிசம்பர் 6 ஆம் தேதி பாபரி மஸ்ஜித் ஷஹீதானதை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கப்படும் என்று தீர்மானம் போட்டது தான் தமுமுக,தெளஹீத்வாதிகளால் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. "மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டினால் அதை குண்டு வைத்துத் தகர்க்க ஜிஹாத் கமிட்டி தீர்மானிக்கிறது" என்று மகா துணிச்சலுடன் தீர்மானம் போட்டவர், பாபா.
தன்னுடன் முரண்பட்ட ஸமது பார்ட்டியையும்,லத்தீப் பார்ட்டியையும் ஒன்றிணைத்து ஒரே இந்திய யூனியம் முஸ்லிம் லீக்காக இயங்க வேண்டும் என்று எழுதியும் பேசியும் பாடுபட்டவர் பாபா. RSSதடை செய்யப்பட்டபோது பேலன்ஸாக ஜமாஅத்தே இஸ்லாமியையும் தடை செய்ததை, தன்னுடன் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுத்ததுடன், தடையை நீக்க தீர்மானம் போட்டதுடன் ஜனாதிபதிக்கும் கடிதமும் எழுதினார், பாபா.
சாதாரணமாக பாபாவின் சுபாவம் அமைதியும்,அடக்கமும் குடிகொண்டது. இளகிய மனம்,யாரையும் பழிவாங்கியதில்லை,பரந்த அறிவுமிக்க நல்ல பண்பாளர்,பலருக்கும் உதவியாளர், ஜாதி மதம், இனம் கடந்த நண்பர்களுடனும் அறிவுஜீவிகளுடனும் தொடர்புகொண்டவர். யார் யாருக்கு அவர்களுக்கு தகுந்தபடி, பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற கலை, பழனிபாபா ஒருவருக்குத்தான் கை வந்ததாகும்.
சமுதாயம் மறந்துவிட்ட ஒரு முஸ்லிம் உலகப் போராளியை இஸ்லாமிய சேகுவாராவை,சிறந்த பண்பாளரை,தேர்ந்த அரசியல் வித்தகரை நினைவுக்கூர்ந்த ஓர் அம்சமே சமநிலை சமுதாயத்தை Top No1 இடத்தில் வைக்கப் போதுமானது. அவர் தம் மாண்புகளை இன்றைய தலைமுறை உணரச் செய்தமைக்கு நன்றி.
பழனிபாபா போன்ற ஓர் அறிவாளி, அஞ்சாநெஞ்சன், வீர வேங்கை மீண்டும் பிறக்க அல்லாஹ்விடம் ஆதரவு வைப்போம்.நாடு முழுவதும் குண்டுவைத்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்துக்கொண்டும் கும்மாளம் போடும் இன்றைய நரித்தன அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஈடுகொடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை, உண்மைகளை ஓங்கி உரைக்கவும் துணிவுடன் பேசவும் எழுதவும் பழனிபாபா இல்லாமல் போய்விட்டாரே என்கிற ஏக்கம் இன்றும் என்னைப் போன்றவர்களின் உள்ளங்களை வருத்தி வருகிறது.
பாபா வாழ்ந்த காலம் வரை கீழ்க்கண்ட சாதனைக்கு அவர் மட்டுமே சொந்தக்காரர்.
இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர்.
அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணி திரட்டியவர்.
சட்டரீதியான சவால்களைச் சந்திக்க ஒடுக்கப்பட்ட மக்களைத் தயார்படுத்தியவர்.
தடா வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய இயலாத இந்தியாவின் ஒரே மனிதர்.
இஸ்லாமிய மக்களின் பிரச்சினைக்காக 100க்கும் மேற்பட்ட முறை அரசால் கைது செய்யப்பட்டவர்.
இறுதியில் இஸ்லாமியர் - ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக த உயிரையே தியாகமும் செய்துவிட்டார்.
-நன்றி ஹாஜி ப.சையத் அஹ்மத், கொள்ளிடம்
-நன்றி சமநிலைச் சமுதாயம் மார்ச் 2011
Sunday, 1 July 2012
திருமணம்
மல்லிபட்டினம் மர்ஹூம் கு.மு. மீராசாஹிப் ,மர்ஹூம் அம்பலம் கு.மு. சுல்தான் அப்துல் காதர் ஆகியோரின் பேரனும் கு.மு.சுல்தான் அப்துல் காதர் ,கு. மும்தாஜ் ஆகியோரின் அன்பு மகனுமான S.மீராசாஹிபு அவர்களுக்கும்
நாகப்பட்டினம்S.M கமாலுதீன் , மர்ஹூம் A.நெய்னாமுகம்மது கனி ஆகியோரின் பேத்தியும் ஜனாப் K. ஜமாலுதீன் அகமது அவர்களின் அன்பு மகளுமான J.தாஹிரா பானு அவர்களுக்கும் நாகப்பட்டினம் அம்பிகாபதி திருமண மண்டபத்தில்நேற்று (02/07/2012) நிக்காஹ் சிறப்பாக நடைபெற்றது.
நமதூரை சேர்ந்த உற்றார் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Thursday, 28 June 2012
Sunday, 24 June 2012
Saturday, 23 June 2012
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பேக் வழங்கும் விழா
இன்ஷா அல்லாஹ் நாளை(24/06/2012) ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லிபட்டினம் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக சமுதாய மேம்பாட்டு துறை சார்பாக மல்லிபட்டினத்தின் அனைத்து கல்விகூடங்களிலும் பயிலும் அனைத்து சமுதாய மாணவ மாணவியருக்கும் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பேக் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது .
ஊர் முக்கிய பிரமுகர்கள் , கல்வியாளர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க இருக்கின்றார்கள் .
நீங்களும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்து தாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மல்லிபட்டினம்
Sunday, 17 June 2012
Wednesday, 6 June 2012
மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 12/06/2012 அன்று இந்நிகழ்ச்சி http://mallipattinamnews.blogspot.com/ ல்
நேரலை செய்யப்படும்
நேரலை செய்யப்படும்
Monday, 21 May 2012
ஹஜ் மானியம்
ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?
--கேள்வி :கடையநல்லூர் மசூது
பதில் :
இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயாபைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பது தான் உண்மை.
இவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும்.
மூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.
இந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்? சாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத் தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.
இந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.
சவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அது தான் மானியமாம்.
ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக்கட்டணம் பத்தாயிரத்தை தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.
மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக்கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப்பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள்ளை அடித்து விட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
ஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டி விட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாராம் செய்வதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை லவட்டி விட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும் மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.
மற்றவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்த தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் வரிசெலுத்த வேண்டும் என்பது தான் யதார்த்தம்.
ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்து விட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.
மத்திய அரசே ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால் தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்து கொள்வார்கள்.
மத்திய அரசாங்கம் தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது? எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியுமே?
நன்றி உணர்வு