மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் ) மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...
Monday, 25 July 2011
Thursday, 21 July 2011
Tuesday, 12 July 2011
தேர்தல் நடப்பது உறுதி
நேற்று (11/07/2011) திங்கள் கிழமை வேட்புமனு வாபஸ் வாங்கும் கடைசி தினம் என்பதால் - பழைய நிர்வாகிகள் அனைவரும் வாபஸ் வாங்கிவிடுவார்கள் , தேர்தல் இல்லாமல் புது நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துதுவிடலாம் என்ற ஆசை ஊர் மக்களிடம் பரவலாக காணப்பட்டது. ஆனால் நான்கு பேர்கள் மட்டுமே வாபஸ் வாங்கி உள்ள நிலையில் தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.
வாபஸ் வாங்கியவர்கள் விபரம்.
வாபஸ் வாங்கியவர்கள் விபரம்.
Monday, 4 July 2011
நாமினேஷன் தாக்கல்
தேர்தல் இல்லாமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து விடலாம், ஊரில் சண்டை சச்சரவுகளை தவிர்த்து ஜமாத் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து விடலாம் என்ற பலரின் ஆசை தோற்றுப்போனது.
இறுதிக்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின .சமாதான முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்ட நிலையில் வேறு வழி இல்லாததால் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இன்று நாமினேஷன் தாக்கல் செய்தவர்களின் பட்டியல் விபரம்
Saturday, 2 July 2011
ஒருங்கிணைப்பு முயற்சி
நமதூரில் இன்று 02/07/2011 சனிக்கிழமை அசருக்குப் பிறகு நடைபெற்ற ஊர் பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1. ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை .
2. தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர்ப்பது. தேர்தல் நடத்தினால் குரோதங்களும் விரோதங்களும் அதிகமாகுமே தவிர ஊர் ஒன்று பட்டு இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்திற்காகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
குறிப்பு; .இந்த கூட்டத்திற்கு முன்னாள் நிர்வாகிகள் M.K.M ஜைனுலாபுதீன் , ரஷீத் இவர்களை தவிர மற்ற நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.