வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Sunday, 24 June 2012

Saturday, 23 June 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பேக் வழங்கும் விழா


இன்ஷா அல்லாஹ் நாளை(24/06/2012) ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லிபட்டினம் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக சமுதாய  மேம்பாட்டு துறை சார்பாக மல்லிபட்டினத்தின் அனைத்து கல்விகூடங்களிலும் பயிலும் அனைத்து சமுதாய மாணவ மாணவியருக்கும் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பேக் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது . 

ஊர் முக்கிய பிரமுகர்கள் , கல்வியாளர்கள்  கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க இருக்கின்றார்கள் .

நீங்களும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்து தாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம் 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

மல்லிபட்டினம் 




Sunday, 17 June 2012

Wednesday, 6 June 2012

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் 12/06/2012 அன்று  இந்நிகழ்ச்சி http://mallipattinamnews.blogspot.com/ ல்

நேரலை செய்யப்படும்


Monday, 21 May 2012

ஹஜ் மானியம்



ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா?

--கேள்வி :கடையநல்லூர் மசூது

பதில் :

இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.

வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயாபைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பது தான் உண்மை.

இவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

மூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.

இந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்? சாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத் தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.

சவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அது தான் மானியமாம்.

ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக்கட்டணம் பத்தாயிரத்தை தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக்கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப்பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள்ளை அடித்து விட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

ஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டி விட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாராம் செய்வதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை லவட்டி விட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும் மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.

மற்றவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்த தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் வரிசெலுத்த வேண்டும் என்பது தான் யதார்த்தம்.

ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்து விட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.

மத்திய அரசே ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால் தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்து கொள்வார்கள்.

மத்திய அரசாங்கம் தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது? எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியுமே?


நன்றி உணர்வு

Monday, 7 May 2012

மல்லிப்பட்டினம் கந்தூரி காணொளி





தர்கா வளாகத்தின் முந்தய நிலை http://mallipattinamnews.blogspot.com/2011/04/blog-post_27.html

Monday, 30 April 2012

வேண்டுகோள்

மல்லிபட்டினம் கந்தூரி விழாவின் போட்டோ அல்லது வீடியோ போடுவதற்கு உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா?

உங்கள் மேலான கருத்துக்களை எழுதவும்.

Tuesday, 10 April 2012

மோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்!



குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்த 2002ம் ஆண்டைத் தொடர்ந்து கடந்துபோன துக்ககரமான 10 வருடங்களில் மோடியின் அரசு இயந்திரம், பாஜக வின் செல்வச் செழிப்பு, குஜராத் இந்துக்களின் மோடி ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் மோடியை பொது அரங்கிற்கு கொண்டு வருவதற்கான பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கென அனைத்துவிதமான அரசியல் அஸ்திரங்களும் பொருளாதார செலவீனங்களும் இந்தியாவிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் யாவும் எவ்வித பலனையும் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.


மோடிக்கு விசா தர 6 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா மறுத்து விட்டது. பிரிட்டனோ மோடியின் வருகைக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்த பின்பே அனுமதித்தது. இந்தியாவிற்குள்ளும் விரும்பிய மாநிலத்திற்குள் வருகை தர முடியாத நிலைமை மோடிக்கு! இந்தியாவில் பாஜக ஆளும் சில மாநிலங்களுக்கு மட்டுமே மோடி சென்று வர முடிகிறது.

முஸ்லிம்கள் அல்லது மதச்சார்பற்ற இந்து பெருமக்கள் போதுமான எண்ணிக்கையில் வாழுகின்ற மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மோடி கால் வைக்க முடியாத நிலை தான் குஜராத் கலவரம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கடந்த பின்பும் நிலவுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மோடிக்கு ஆதரவு தருவதன் காரணமாக மிகுந்த பாதுகாப்புகளோடு அரசு விழாக்கள் அல்லது சில தனிப்பட்ட உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடியால் முடிகிறது. அதுவும் திருடனைப்போல கமுக்கமாக வந்து செல்கிறார். அவர் தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு தமிழக மக்களிடம் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியும்.

ஆயினும் நாம் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மோடியால் சகஜமாக வந்து செல்ல இயலாத நிலைதான் உள்ளது.

இந்தியாவில் முன்னிலை ஊடகங்கள், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை 2002 முஸ்லிம் இனப்படுகொலையில் இருக்கும் மோடியின் பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. கெடு வாய்ப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏனோ மோடி மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க முன் வரவில்லை. இது மோடிக்கு சாதகமாக இருக்கிறது.

மோடியின் கொடுஞ்செயல்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு மிகச் சிரமத்திற்கிடையேதான் சென்றடைகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களும், குஜராத்தி இந்துக்களும், பாஜக ஆதரவாளர்களும் மோடியின் ‘கொடுங்கோலன்' இமேஜை மாற்ற விரும்புகின்றன. இவர்களிடம் இருந்து பெருமளவிலான நிதிகள் பாஜக மற்றும் இந்துத்துவா இயக்கங்களுக்கு வருகின்றனர்.

இவர்கள் பெருளாதார வளத்துடனும், அமெரிக்கா, பிரிட்டன் அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பிலும் இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் தொடர்புகள் மூலம் அவ்வப்போது மோடிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த தொடர்ந்து இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக மற்றும் மோடிக்கு உதவும் வகையில் முஸ்லிம்களின் எதிரிகளான யூதர்களிடமும் இவர்களது தொடர்புகள் ஆழமாக உள்ளன.

இதுபோன்ற தொடர்புகளாலும், பெரும் பொருளாதாரப் பின்னணியோடும் இவர்கள் செயல்பட்டு வந்துபோதிலும் 2002ல் மோடியின் மீது படிந்துவிட்ட கொடுங்கோலன் என்ற கறையை துடைத்தெரிய இயலவில்லை என்பதுதான் யதார்த்தம்!

ஏனெனில் 2002 முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தில் மோடிக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மோடி மீது ஏற்பட்டு விட்ட கறையை மறைக்க முயற்சிப்பது மிகக் கடினமானது.

இதன் மூலம் நாம் சொல்ல வருவது யாதெனில், முஸ்லிம்கள் மோடிக்கு எதிரான போராட்டத்தை வீரியம் குறையாமல் முன்னெடுக்க வேண்டும்; ஊடகங்கள் மோடிக்கு எதிராக அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இதன் கார ணமாக மோடி குஜராத் எல்லைக்குள்ளேயே முடக்கப்பட வேண்டும். இது படித்த மற்றும் அறிவுஜீவி முஸ்லிம்களின் பொறுப்பாகும்.

மோடியின் குற்றங்களுக்காக மோடியை சட்டத்திற்கு முன்னால் இழுத்து வந்து நிறுத்துகிற வீரியமான காரியங்களில் இறங்கவில்லை என்றால் முஸ்லிம்கள் வாழ்வதில் அர்த்தமில்லை!

பாஜகவுக்குள் இண்டு பிரிவினர் உண்டு. ஒன்று மோடியை பாஜகவின் அரசியல் நம்பிக்கையாக கருதும் ஒரு பெரும் கூட்டத்தினர், மற்றொன்று மோடியை கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்கள். பாஜக உடைந்தால் மோடியின் பக்கம் சாயும் பிரிவினர் இவர்கள். ஆனால் பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களோ, முஸ்லிம்களும், மதச்சார்பற்ற இந்துக்களும் மோடியை மன்னிக்காதவரை அவர் (2002க்கு முன் இருந்த) பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்றும், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கு பாஜக தள்ளப்படுகிறது என்பதையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனடிப்படையில்தான் சமீபத்திய உ.பி., மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ‘கிங் மேக்கர்'களாக முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்ற செய்தி பாஜகவுக்கு கெட்ட செய்தியாக தெரிகிறது.

இந்தியாவில் மாநிலக் கட்சிகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டுகள், திமுக போன்ற கட்சிகள் அரசியல் நிர்பந்தங்களின்போது கூட பாஜகவையோ, மோடியையோ அரவணைக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம் மோடியையும், பாஜகவையும் முஸ்லிம்கள் மன்னிக்கத் தயாரில்லை என்பதுதான்.

இக்கட்சிகள் யாவும் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் பெரும்பாலும் வெற்றி பெறும் கட்சிகள். அதனால் முஸ்லிம்களின் ஆதரவை அவை இழக்கத் தயாரில்லை.

கடந்த காலங்களில் பாஜகவோடும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குக் காரணமான கல்யாண்சிங்கோடும் கூட்டணி வைத்த மேற்கண்ட காட்சிகளில் சில அதன் மூலம் அடைந்த அரசியல் வீழ்ச்சியை அறிந்து வைத்துள்ளன.

ஆக, முஸ்லிம் சமுதாயம் அறிவுப்பூர்வமாக கச்சிதமான அரசியல் தந்திரங்களை கையாள வேண்டும். மோடியின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியபடியே அருக்கு எதிரான சிந்தனைகளை மக்கள் மையப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மோடிக்கு எதிரான செய்திகளை இஸ்லாமியப் பத்திரிகைகள் முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டும். இதன் மூலம் மோடியை குஜராத் எல்லைக்குள்ளேயே நிறுத்த வேண்டும்.

எப்பொழுதெல்லாம் மோடியின் ஆதரவாளர்கள் (டைம் பத்திரிகை, ஃப்ருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்று) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மோடியை நல்லவராக காட்ட முற்படுகிறார்களோ, மோடிக்கு முக்கியத்துவத்தை உருவாக்கித் தர முயற்சிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்களும் தங்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும்.

மதச்சார்பற்ற இந்துக்கள், நடுநிலை சிந்தனையாளர்களை அதிகளவில் இணைத்து மோடியின் ஆதரவாளர்களை எதிர் கொள்ள வேண்டும்.

இந்த லாபியை தொடர்ந்து முஸ்லிம்கள் செய்து வர வேண்டும். குஜராத்திற்கு வெளியே கால் வைக்க மோடிக்கு அருகதை இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதி கிடைக்காத குஜராத் முஸ்லிம்களுக்கு இது மன ஆறுதலைத் தரும்.

மோடியைப் புகழும் டைம் பத்திரிகை!

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வசித்து வரும் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களால் மோடியை சிறந்த தலைவராக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அங்குள்ள அரசியலிலும், ஊடகங்களிலும் இந்துத்துவாவினர் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள் என்பதற்கு உதராணமாக சமீபத்திய அமெரிக்க ‘டைம்' பத்திரிகை வெளியிட்ட செய்தி ஆதாரமாக உள்ளது.

‘மோடி என்றாலே வணிகம் என்று பொருள். ஆனால், அவரால் இந்தியாவை வழி நடத்த முடியுமா?' என்ற தலைப்பிட்டு மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம் பத்திரிகை (ஆசிய பதிப்பு)

மேலும், மோடி ஒரு சர்ச்சைக்குரிய, லட்சிய உறுதி கொண்ட, நல்ல அரசியல்வாதி என்றும் மோடியின் சாத்பாவ்னா உண்ணாவிரதம் மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது என்றும் எழுதியுள்ளது டைம் பத்திரிகை.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாக்கள் நடத்திய இனப்படுகொலையின் அதிர்ச்சி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விலகாத நிலையில், இரு சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கம் என்ற பாலத்தை எழுப்பி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்ளும் முயற்சியை எடுத்து வருகிறார் மோடி என மோடியை நல்லவராக சித்தரிக்க முயல்கிறது டைம் பத்திரிகை.

இச்செய்திகளுக்கான உபயம் நிச்சயமாக அமெரிக்க இந்துத்துவாக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் டைம் பத்திரிகையை குஜராத் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். அதோடு பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இமெயில்கள் மூலம் டைம் பத்திரிகைக்கு கண்டனத்தை தெரிவிக்குமாறும் அவர்கள் உலக முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ப்ருக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனமும் மோடியைப் புகழ்ந்திருக்கிறது.


இதுபோன்று மோடி நல்லவராக சித்தரிக்கப்படும்போதெல்லாம் அவரது கொடூர முகத்தை மக்கள் மத்தியில் நினைவூட்டிக் கொண்ட இருக்க வேண்டும். இதனை முஸ்லிம்களும், மதச்சார்பற்ற சக்திகளும் செய்ய வேண்டும்.

முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்த ஒருவரை டைம் பத்திரிகை எப்படி பெருமைப்படுத்த முடியும்?
நன்றி-http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19334

Sunday, 8 April 2012

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல-மெரினாவில் இளைஞர்கள் பிரசாரம்


சென்னை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை விளக்கும் பிரசாரத்தை தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு சென்னை மெரீனா கடற்கரையில் மேற்கொண்டது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

ஒளிராத இந்தியாவும் அன்னா ஹசாரேவும் - முத்து கிருஷ்ணன்


நேற்று குவைத்தில் உள்ள பஹாஹீல் பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் சமூக போராளியும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன் அவர்களின் "நஞ்சாகும் நீதி" எனும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். முத்து கிருஷ்ணன் குறித்து இந்நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான வாசகர் கடிதம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

புத்தக வெளியீடு, அதற்கான விமர்சனம், வாழ்த்துரை எல்லாம் முடிந்த பிறகு முத்துகிருஷ்ணன் பேசியதிலிருந்து சில முக்கிய குறிப்புகளை தொகுத்து தருகிறேன். வெள்ளி அன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பலஸ்தீன பயணம் குறித்து இரண்டு மணி நேரம் பேசியுள்ளார் என்பதை கலந்து கொண்டவர்கள் சொன்னார்கள். விளம்பரம் இல்லையென்றாலும் சுமார் நூறு நபர்கள் கலந்து கொண்டனர்.

1. இது வரை தன்னுடைய எப்புத்தகத்துக்கும் புத்தகவிழா நடத்தியதில்லை என்றும் தன்னை பாராட்டும் அளவு தான் எதையும் செய்யவில்லை என்றும் தன்னுடைய கடமையையே தான் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

2.  இந்தியா வல்லரசு என்று கணவு காணும் அதே வேளையில் தான் நேரில் கிராமங்களில் பார்த்த இந்தியாவுக்கும் ஊடகங்கள் சொல்லும் இந்தியாவுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

3.  மஹாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் 10 வருடங்களில் 2.5 இலட்சம் விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை பூச்சி மருந்துகளை அடித்து விவசாயம் பொய்த்து தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை சொன்னார். இந்திய ஊடகங்களிலேயே கிராமபுற நிலவரங்களை கவனிப்பதற்காக சிறப்பு எடிட்டரை ஹிந்து பத்திரிகை வைத்துள்ளதாகவும் அதன் சிறப்பு எடிட்டர் சாய்நாத் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்ற தகவலையும் தந்தார்.

4. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் விரிவாக்க பணிகளுக்காக அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை சொன்னார்.

5.  குஜராத்தில் கோத்ராவில் 68 நபர்கள் கொல்லப்பட்டதற்கு "அவர்கள் ஒரு தின போட்டியை நடத்தினார்கள். நாம் டெஸ்ட் போட்டிகளை நடத்துவோம்" என்று கூறி 2000 முஸ்லீம்களை மோடி கொன்றதை ஆதாரத்துடன் கூறினார்.

6. சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதாக கூறி அங்குள்ள 5 இலட்சம் மக்களை வெளியேற்றி 36,000 ஏக்கர் நிலங்களை சுவராஜ் பால் போன்ற பண முதலைகளிடம் கனிம வளங்களை சுரண்ட கொடுத்த அரசியலையும், பழங்குடி மக்களை கொண்டே அவர்களை கொல்ல சிறப்பு படைகளை உருவாக்கிய மக்கள் விரோத அரசியலையும் படம் பிடித்து காட்டினார்.

7.  இந்தியா சுதந்திரம் அடையும் வரை வெள்ளைக்காரனுக்கும் அடிமையாகாமல் இருந்த ஹைதரபாத் நிஜாமை படை பலத்தை கொண்டு ஆந்திராவை இந்தியாவுடன் இணைத்ததையும் தெலுங்கானா மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதாலேயே தனித் தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளாக சொன்னார்.

8.   11 ஆண்டுகளாக சோற்றை பிசைந்து கொண்டு தன் மகளுக்கு சோறு ஊட்ட ஆவலோடு காத்து நிற்கும் மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவின் தாயாரின் கண்ணீர் கதையையும் விவரிக்கவே முடியாத காஷ்மீரின் சோகங்களையும் பட்டியலிட்டார்.

9. கூடங்குளத்தில் போராடும் 10,000 பொதுமக்களை 8,000 காவல்துறை கொண்டு அடக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை சாடிய முத்துகிருஷ்ணன்  நகரங்கள் கொழுப்பதற்காக கிராமங்களை இந்தியா ஒளிராமலேயே வைத்து கொன்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். 2 கேரள மீனவர்கள் இத்தாலிய மீனவர்களால் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என்று சொன்ன ஊடகங்களில் இலங்கையால் கொல்லப்பட்ட 547 தமிழக மீனவர்களை பற்றி கொஞ்சமும் கவலை படவில்லை என்றார்.

10. அன்னா ஹசாரே பற்றிய கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த முத்துகிருஷ்ணன் 64 கோடி போபர்ஸுக்கு பதறிய நாம் இன்று 1.75 இலட்சம் கோடியை குறித்து கவலைப்படாததற்கு காரணம் கார்பரேட்டுகள் என்று குறிப்பிட்டவர் அத்தகைய கார்பரேட்கள் ஆதரவோடு ஊழலை ஒழிக்க நினைப்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார். விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட 2.5 இலட்சம் விவசாயிகளை பற்றி கவலை கொள்ளாத ஊடகங்கள் ஐ.பி.எல்ல்லுக்கு இணையாக அன்னாவுக்கு லைவ் கவரேஜ் கொடுத்தது அவரின் நம்பகத்தன்மையை இன்னும் கேள்விக்குறியாக்கியது என்றார்.

11.  அன்னா ஹசாரேவின் கிராமத்திற்கு தாம் சென்றதாகவும் அங்கு எவ்வித ஜனநாயக மாண்புகளும் இல்லாமல் அன்னாவின் சர்வதிகாரம் கொடி கட்டி பறப்பதாகவும் இன்று வரை ஒரு கிறிஸ்தவர் அல்லது ஒரு முஸ்லீமையும் தன் கிராமத்தில் குடியேற அன்னா அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் சொன்ன முத்துகிருஷ்ணன் இடஒதுக்கீடு விஷயத்திலும் அன்னாவின் நிலைப்பாட்டை தோலுரித்து காட்டினார். உதயகுமார் அமெரிக்காவில் பணிபுரிந்த போது ஹிந்து ராம் உள்ளிட்ட சுமார் 20 அறிவு ஜீவிகளை அமெரிக்காவுக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தியதை இன்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்றும் இத்தகைய அரசு அடக்குமுறைக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடுவேன் என்றும் முத்துகிருஷ்ணன் கூறினார்.

Friday, 6 April 2012

சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் டைம் இதழின் கணக்கெடுப்பில் மோடி மோசடி: காங். குற்றச்சாட்டு



 அஹமதாபாத்:’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.

அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர்,  குஜராத் அரசின் பல்வேறு  இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம்  இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

‘ஆம்’ பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த  தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் தாம் வரவேண்டும் என்ற சாதாரண  காரணத்துக்காகத்தான் என மோத்வாடியா குற்றம்சாட்டினார்.

டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்பில் பட்டியலில் மோடி 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரெட்டிட்.காம் பொது மேலாளர் எரிக் மார்ட்டின் முதல்  இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 4 April 2012

தமிழக சிறை கைதிகள் இனி மேல் சுதந்திரமாக பேசலாம்



சென்னை : புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் முன்பு போல் இனி திருட்டுதனமாக பேச வேண்டியதில்லை. அதிகாரபூர்வமாகவே அவர்கள் பேசுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்து உள்ளது. ஆம் விரைவில் டெலிபோன் பூத்துகள் சிறைகளில் அமைக்கப்பட உள்ளன.
புழல், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 சிறைச்சாலைகளுக்கு இவ்வசதி முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. டெலிபோன் பூத்துகள் அமைப்பதற்காக 1 கோடியே 58 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி மேல் திருட்டுத்தனமாக செல்போன்கள் சிறைகளுக்கு  கடத்தப்படுவதும் அது தொடர்பான ஊழல் மற்றும் குற்றங்களும் குறையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் அமலுக்கு வந்த பின் சிறை கைதிகள் சிறைசாலை அதிகாரிகளிடம் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் இரு தொலைபேசி எண்களை கொடுத்து அவ்வெண்களை தொடர்பு கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 3 தடவையும் 30 நிமிடங்கள் வரையும் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவறாக உபயோகித்தால் இவ்வசதி அக்கைதியிடமிருந்து திரும்ப பெறப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 3 April 2012

வரலாற்றில் இன்று கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள்



 இன்று 3.3.2012 இன்றைய திகதியில்தான் அன்று 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கப்பட்டது முஸ்லிம் சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்டது. மேற்கின் நூற்றாண்டு கால கனவு நிஜமானது. இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் எதோ ஒருவகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு தலைமை வகித்து வந்தது. முழு மனித இனத்திற்கு அருளாய் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்றைய திகதியில் அன்று அழிக்கப்பட்டு இன்றுடன் 88 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மா கிலாபத் நோக்கி மிக வேகமாக முன்னேற தொடங்கி விட்டுள்ளது அதிலும் இந்த ஆண்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல நாடுகளிக்கும் பாரிய அரசியல் வெற்றிகளை பெற்றுவருகிறது. அரசியல் வெற்றி என்பது பிரமாண்டமான இஸ்லாமிய எழுச்சியின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டும்தான் . அரபு முஸ்லிம் நாடுகளின் ஒன்றன் பின் ஒன்றாக சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டு அந்த இடங்களை இஸ்லாமிய சக்திகள் கைப்பற்றி வருகின்றமை இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும் .

அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் துனூசியாவில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது . அதன் பின்னர் அந்த பிராந்தியம் சந்தித்த இரண்டாவது தேர்தல் மொரோகோவில் இடம்பெற்றது அதிலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் எகிப்தில் இஸ்லாமிய சக்திகள் மிகப் பாரிய வெற்றிகளை பெற்றுள்ளது ,அதேபோன்று குவைத்திலும் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றுள்ளது , அதை தொடந்து அந்த வெற்றி பாதையில் லிபியா , யெமன், சிரியா ஆகியா நாடுகள் பயணிக்க காத்திருகிறது . ஆகவே இந்த ஆண்டில் கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆவது ஆண்டை சந்தித்துள்ள முஸ்லிம் உம்மா உலகில் மிகவும் பலமான இஸ்லாமிய எழுச்சி ஒன்றை கண்டு வருகிறது.

இந்த சந்தர்பத்தில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தனது குத்பா உரையில் விடுத்துள்ள அழைப்பை சுட்டிக்காட்டுவது பொருத்தமானது – ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசொன்றை எகிப்து, லிபியா, தூனிஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு கிலாபத் நோக்கிய பயணத்துக்கான முன் அழைப்பாக பார்க்கப் படுகிறது.

அதேவேளை கிலாபத் இறுதியாக எந்த தேசத்தில் அழிக்கப்பட்டதோ அதேதேசத்தை இஸ்லாத்தை நேசிக்கும் , அதை உலகில் நிலைநிறுத்தும் உன்னதமான நோக்கம் கொண்ட அரசியல் கட்சி ஒன்று ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. எந்த பூமியில் கிலாபத் அழிக்கப்பட்டதோ அந்த பூமியை கைப்பற்றியுள்ள அரசியல் சக்திதான் இன்றையா இஸ்லாமிய எழுச்சியின் அரசியல் மாதிரியாக கொள்ளப்பட்டு வருகின்றது .

உண்மையில் துருக்கியில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முஸ்லிம் உலகின் புதிய அரசியல் ஒழுங்கு ஒன்றின் முன்னோடியாக பார்க்கப்படுகின்றது. துனூசியாவிலும், எகிப்திலும் தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் மொரோகோவிலும் , குவைத்திலும் , வெற்றி பெற்றுள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகளும் ,இன்னும் லிபியாவிலும் , யெமனிலும் வெற்றிநோக்கி நகரும் மக்களும் துருக்கியின் மாதிரி அரசியலை தமது முன்மாதிரி அரசியலாக கைகொள்ள விரும்புகின்றனர்.அதை நோக்கியே அழைப்பும் விடுத்து வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் நாம் சந்தித்துள்ள 88 ஆவது ஆண்டு கிலாபத்தின் மீள் எழுச்சிக்கான காலத்தில் நாம் உள்ளதை தெளிவாகவே காட்டுகிறது , பயணங்கள் தொடரட்டும் .

"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு"


"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன்.  அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது, தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள், ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும், பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும், தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ  9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது, அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும், அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு, அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில், அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 "இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்

Tuesday, 27 March 2012

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு!



இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின்சட்டத்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE  என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.

இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.

1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.

கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரிஎழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்குத் தமிழக அரசின் "தமிழ் இணைய அறிஞர்" என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை.

தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம்.காயல் S.K.   , காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பிலிருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீதை' உருவாக்கிய மூத்த தவ்ஹீத் பிரச்சாரர். பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
*******
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012  (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in /adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது 055-4212 575  /  050-4737200 என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, 22 March 2012

இலவச மருத்துவ முகாம்

நாளை நடைபெற இருக்கும் இலவச மருத்துவ முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .


Friday, 16 March 2012

திருமணம்

மல்லிபட்டினம் காசிம் அப்பா தெரு M.K.M ஜபாருல்லா அவர்களின் மகனார் முகம்மது இஸ்ஹாக் அவர்களுக்கும் மல்லிபட்டினம் திப்புசுல்தான் தெரு M.K.M ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மகள் சித்தி மஜூரா அவர்களுக்கும் 26/02/2012 அன்று திருமணம் இனிதே நடைபெற்றது  




Wednesday, 7 March 2012

மீலாது நபி விழா



Thursday, 23 February 2012

கோவை அன்சாரியின் சிறை நினைவுகள்....

கோவை அன்சாரியின்  சிறை நினைவுகள்....


பிப்ரவரி 14 ஆம் தேதியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள் மத்தியில் நானும் என்னோடு சிறையில் இருக்கும் சகோதரர்களும்  இந்த நாள் வந்தவுடன் வருத்தம் அடைந்தோம். காதலர் தினத்துக்காக இல்லை, எங்களின் சிறை வாழ்க்கைக்காக.
ஆம், இன்று எங்களின் சிறை வாழ்க்கைக்கு வயது 14 . பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இதே நாளில்தான் நானும் என் சகோதரர்களும் கைது செய்யப்பட்டோம். ஹிந்துத்வா தீவிரவாதி அத்வானி கோவை வந்தபோது நடந்த குண்டுவெடிப்பை காரணம் காட்டி நாங்கள் எல்லாம் அள்ளி செல்லப்பட்டோம். இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைது வேட்டை என்ற தலைப்பை வெளியிட்ட தினமலரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனேயே கையில் கிடைத்த முஸ்லிம்களை எல்லாம் வாரி சென்றது காவல் துறை (மன்னிக்கவும்) காவித்துறை. பதறிய சொந்தங்களும் கதறிய குழந்தைகளும் எங்களை வந்து காண கூட இந்த பாவிகள் அனுமதிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நாங்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. என் சகோதரர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் வீடு புகுந்து பெண்கள் என்னும் பாராமல் அவர்களை கீழே தள்ளி மிதித்து சென்ற முரட்டு பாவிகள் இவர்கள்.
குண்டு வெடிப்பில் 58 பேர் இறந்துபோனதாக பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள் நவம்பர் கலவரத்தில் மாண்டவர்களை மறந்து போனார்கள். 19 முஸ்லிம்கள் காவல் துறையாலும், காவி பயங்கரவாதிகளாலும் கொல்லப்பட்டபோது இவர்களின் பேனா நுனிகள் எழுதிட முன்வரவில்லை. ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நாட்டின் முக்கிய மூன்று தூண்களில் இந்த பத்திரிக்கயாலர்கலும் ஒரு பிரிவினர் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எனக்கும், இன்னும் சில சகோதரர்களுக்கும் சிறைவாசம் பற்றிய அனுபவம் கொஞ்சமாவது இருந்தது.
ஏனென்றால், தடா வழக்கிலே நாங்கள் ஏறத்தாள மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறோம். ஆனால் பதினைந்து வயதுடைய சிறுவர்களையெல்லாம் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்தபோது என் இதயம் வெடித்தே போனது. எந்த ஒரு முஸ்லிமும் வாய் திறந்தாலே கைது செய்யப்படும் நிலை இருந்ததினால் முன்வந்து பேசிட யாருக்கும் திராணி இல்லை. முந்தைய மூன்று ஆண்டுகள் எங்களின் சிறை வாழ்க்கை நரகமாகவே மாறிப்போனது. பாசிச ஹிந்துத்வா சக்திகள் ஆட்சி கட்டிலில் இருந்ததினால் அவர்கள் நினைத்ததெல்லாம் செய்தார்கள். சிறை வார்டன்கள் மாற்றப்பட்டு பாசிச சிந்தனையுள்ள தீவிரவாதிகள், காவலர்கள் என்ற பெயரில் சிறையினுள் நுழைந்தார்கள். மறைந்த ரங்கராஜ குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்தபொழுது இதை முழு மூச்சுடன் செய்தார் என்ற செய்தியை நாங்கள் பிற்காலங்களில் அறிந்தோம்.
இன்றைய குவாண்டனாமோ சிறையை அன்றே சந்தித்தவர்கள் நாங்கள். பட்ட துன்பத்தையும் துயரத்தையும் இங்கு வார்த்தைகளில் சொல்லிட இயலாது. காவல்துறை காவித்துரையாகவே மாறிப்போனது.
எங்கள் ஒவ்வொருவரையும் பத்து பேர் கொண்ட காவல்துறை ஒரு அறைக்கு அழைத்து செல்வார்கள். மயக்கமுறும் அளவிற்கும், லத்தி உடையும் அளவிற்கும் அடிப்பார்கள். மயக்கமுற்ற உடனே எங்களை கொண்டுவந்து எங்கள் அறையில் போட்டுவிட்டு மற்ற சகோதரனை தூக்கி செல்வார்கள். தொழக்கூட எங்களால் எழுந்து நிற்க முடியாத நிலை. பலமுறை நாங்கள் நிருவானப்படுத்தப்பட்டோம். பலமுறை நாங்கள் கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டோம். தலைகீழாக தொங்குவதின் காரணத்தால் எங்கள் தலையில் ரத்தம் சூடேறி கண்களெல்லாம் இருண்டு போகும்.தொழுகை நடக்கும் இடத்தில் சிறுநீர் கழித்த பாவிகளும் உண்டு.
அறையின் வாசலில் மனித மலத்தை கொட்டி இரவு முழுக்க நாற்றத்தினால் தொலைந்த தூக்கங்கள் எத்தனை. இன்னும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்த எங்களின் இருதயத்தை இன்றும் தடவி கொடுக்கும் மயில் இறகாக இருப்பது தக்வா மட்டுமே. போராட்டம் என்பது இனி எங்களுக்கு புதிதல்ல. இன்னும் எத்தனையோ கொடுமைகளை இங்கே எழுதிடலாம் ஆனால் அவற்றினால் உங்கள் மனது புண்பட்டுவிடுமோ என்று ஐயப்படுகிறேன். அந்த நாட்களை நினைத்து பார்த்தேன், அதில் சிலதை உங்கள் மத்தியில் பகிர்ந்திட ஆசைப்பட்டேன்.
அன்பு சகோதரர்களே, நாங்கள் அடைந்த துன்பங்களையெல்லாம் உங்களிடத்தில் சொல்லி உங்களையும் துன்பப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கோ என்னோடு மீதமுள்ள சிறைவாசிகளுக்கோ இல்லை, ஆனால் எங்களின் வலியை எடுத்து சொன்னால் நீங்கள் மறக்காமல் உங்கள் தொழுகையில் துவா செய்வீர்கள் என்ற எண்ணமே என்னை இங்கே எழுதிட வைத்தது.
எங்களின் பிணைக்காக உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். வரும் 24 ஆம் தேதி தீர்ப்பு தருவதாக கூறியுள்ளார்கள். நல்ல செய்தி கிடைத்திட துவா செய்ய இஸ்லாமிய சகோதரனாக கேட்டு கொள்கிறேன். நீங்கள் இடும் கருத்தே எங்களின் பாதி மருந்து. தயவுசெய்து கருத்திடுங்கள்.
இவன்
முஹம்மது அன்சாரி
கோவை மத்திய சிறை
கோவை.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தமிழக முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மல்லிபட்டினம் மேல்நிலைப்பள்ளியில் +1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Tuesday, 31 January 2012

சமூக சேவையில் மஜ்லிசுல் உலமா சபை




Sunday, 29 January 2012

வளர்ச்சிப்பணிகள்

பள்ளிவாசலின் முகப்பில் இருந்த டாய்லட் இடித்து அப்பறப்படுத்தப்பட்டு
தளம் போடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சி.




Monday, 16 January 2012

பரப்பப்பட்ட புருடாக்களும், மறைக்கப்பட்ட வரலாறுகளும்.

நமது தலைநகர் டெல்லி, புது டெல்லி, மற்றும் பழைய டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி என்றழைக்கப்படும் புரதான சின்னங்கலடங்கிய, அதாவது செங்கோட்டை, குதுப்மினார், ஜாமா மசூதி போன்ற வரலாற்று புகழ்பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பழைய டெல்லியில் பெரும்பாலும் வசிக்கும் இஸ்லாமியர்கள் வறுமைக்கோட்டிற்கு மிகவும் கீழே இருப்பவர்களை காணப்படுகிறார்கள். அவர்களிடம் இஸ்லாமிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றது.. மற்றபடி அவர்களது பழக்க வழக்கங்கள் போதைக்கு அடிமைப்பட்டவர்களாய் காணப்பப்டுகிரார்கள். ஜாமா மசூதி, செங்கோட்டை போன்ற சுற்றியுள்ள பகுதிகளை வசிக்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள், ரிக்ஷா, ஆட்டோ, ஓட்டும் தொழிலாளர்களாகவும், சுமைதூக்கும் தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு வருகை தந்த - கவனிக்கவும், வருகைதந்த முகலாயர்கள் - இந்தியர்களின் விருப்பத்திற்கிணங்க தான் ஆட்சி புரிந்தார்கள். அதாவது கி.பி. 1526 நடைபெற்ற முதல் பானிபட் போர் எனபது, அப்போது டெல்லியை ஆண்ட மன்னன் இப்ராஹீம் லோடி என்பவனுக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாபர் என்பவருக்கும் நடந்தது. இந்த போரில் தான் முதன்முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன எனபது வரலாறு.

அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹீம் லோடி என்பவரின் ஆட்சியை விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மன்னர் பாபரை அழைத்தனர். இதைதான் வரலாற்று புரட்டர்கள் முகலாய படையெடுப்பு என்ற நச்சுகருத்தை நமக்கு சிறுவயதிலேயே திணிக்கின்றனர்.அது படைஎடுப்பல்ல, அப்போதைய மக்களின் விருப்பம். அதனால்தான் பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் கூட, பசுவை தெய்வமாக வணங்கும் மக்கள் நிறைந்த நாடு இது, எனவே பசுவை இறைச்சிக்காக அறுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.படையெடுத்துவந்த மன்னன் அந்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவானா, தன்னிஷ்ட்டப்படி ஆட்சி செய்வானா?

அதன்படி, பாபர், ஷெர்ஷா, ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று வரிசயாக இஸ்லாமிய மன்னர்கள் தொடர்ந்து - சொந்த விசயங்களில் அவர்கள் தவறானவர்களாக இருந்திருக்கலாம்..ஆனால் ஆட்சி என்று வரும்போது, அன்றைய மக்கள் விரும்பிய- நல்லாட்சிகளேயே வழங்கி வந்தனர். அது மட்டுமல்ல, பல்வேறு குட்டி குட்டி ராஜ்யங்கலாகவும், சமஸ்தானங்களாகவும், தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு பல்வேறு பிரதேசங்களாக இருந்த இந்த நாட்டை, இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது முகலாயர்களின் சாதனை.
அவுரங்கசீப் வரை அனைத்து மக்களின் நலனை கொண்டே எல்லாரும் ஆட்சி செய்த காரணத்தினால்தான், அவுரங்கசீப்பினால் தனது ராஜ்யத்தை தென்னிந்தியாவரை விஸ்தரிக்க முடிந்தது. அவர் ஒரு பரிபூரண இஸ்லாமியராக - கொள்கையுடன் வாழந்த காரணத்தினாலேயே இந்த வரலாற்று புரட்டர்களால், முகலாய மன்னர்களிலேயே மோசமானவராக சித்தரிக்கபடுகிறார்.அவர் இருக்கும்வரை கட்டுக்கோப்பாக இருந்த முகலாய சாம்ராஜ்யம், அவுரங்கசீப்பிற்கு பின்னர்தான் சீரழிந்தது. இறுதியில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட கொல்லப்பட்ட முகலாய கடைசி சக்கரவர்த்தி "ஷா" மன்னரின் ராஜ்ஜியம் அவரது அரண்மைக்குள்ளே மட்டும்தான் என்றால் பார்த்துக்கொள்ளவேண்டியது.
ஆனால் இன்று முகலாய மன்னர்களின் வாரிசுகள் யார், எங்கிருக்கிறார்கள் என்ற எந்த ஒரு சான்றும் எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன்..(அப்படி இருந்தால் யாராவது தெரிவியுங்களேன்..பிளீஸ் )
முன்னூறு ஆண்டுகளுக்கும் இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களின் வாரிசுகள் எங்கே சென்றார்கள்? அவர்களின் வாரிசுகதான் பழைய டெல்லியில் வசிக்கும் சாலையோர வாசிகளோ.? அதனால்தான் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு அடித்தட்டு மக்களைவிட மோசமான நிலையில் இருகிறார்களோ?

ஆனால்...
நாற்பதினாயிரம் மனைவிகளை மணந்து, ஒரு முனிவர் கொடுத்த ஏதோ ஒரு கனியின் மூலம் நான்கு மகன்களை பெற்ற தசரதன்...

நூறு பேர் கொண்ட படையை வென்ற ஐந்து பேர்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் -

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வைத்திருந்த மணிமேகலை

சாவே வராத நெல்லிக்கனியை தின்ற அவ்வையார்

தனது கன்றை கொன்ற மன்னனின் மகனை கம்ப்ளைன்ட் செய்த பசு மாட்டிற்காக (?) மகனை தேர் எற்றிகொன்ற மனுநீதி சோழன்

ஒரு குச்சியை வைத்தால் நின்று விடும் முல்லைக்கு விலை மதிப்புள்ள தேரை கொடுத்த பாரி

மயிலுக்கு குளிர் எடுக்கும் என்று போர்வை வழங்கிய பேகன்

கணவனுக்கு தண்டனை வழங்கியதற்காக மதுரையையே எரித்த கண்ணகி.

போன்ற புனைக்கதைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இங்கே - நம் நாட்டை பல நூறு வருடங்கள் ஆண்ட முகலாய சரித்திரத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது வரலாற்று மோசடி என்பதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?

நன்றி:http://adiraixpress.blogspot.com/2011/11/2_30.html

Friday, 13 January 2012

நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

மல்லிபட்டினம் கடைத்தெருவில் நாளை மாலை SDPI சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கிளை தலைவர் ஜெய்லானி அவர்கள் தெரிவித்தார்.

Wednesday, 11 January 2012

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்

 
1) தொழுகையில் இமாமை முந்துதல் : 
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் "ஆமீன்" என்று சொல்லுங்கள்". மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?" என்றார்கள்.
2) கொலை செய்தல் :
"எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்" (அல்-குர்ஆன் 4:93)
‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)
3) விபச்சாரம் செய்தல் : 
"நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது" (அல்-குர்ஆன் 17:32)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை." (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்) 
4) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல் :
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை" (அல்-குர்ஆன் 29:28-29)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாம்: அஹ்மத்)
5) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல் :
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்" (அல்-குர்ஆன் 2:278-2:279)
"வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்" (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
6) மது அருந்துதல் :
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள்: அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா)
7) சூதாட்டத்தில் ஈடுபடுதல் :
"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது." (அல்குர்ஆன் 2: 219)
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
8) பொய் பேசுதல் :
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
9) திருடுதல் :
"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 5:38)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
10) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல் :
"அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்" (அல்-குர்ஆன் 2:188)
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னுமாஜா).
11) பொய்சாட்சி கூறுதல் :
அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)
12) அவதூறு கூறுதல் :
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
13) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல் :
"நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)
‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.
14) கர்வம் கொள்ளுதல் :
"நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை" (அல்-குர்ஆன் 4:36)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்." (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
15) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல் :
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்." (ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்)
16) அளவு நிறுவையில் மோசடி செய்தல் : 
"அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)
"மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்" (அல்-குர்ஆன் 55:7-9)
17) பிறர் சொத்தை அபகரித்தல் : 
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள் : "எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்" என்று கூறினார்கள்.
18) மோசடி செய்தல் : 
"எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்" (அல்-குர்ஆன் 3:161)
"நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (அல்-குர்ஆன் 8:58)
19) அநீதி இழைத்தல் : 
"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
20) புறம் பேசுதல் : 
முஃமின்களே! (சந்தகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)