வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Tuesday, 30 August 2011

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

 சவுதியின் கபதுல்லாவை நோக்கி தொழும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்     மல்லிபட்டினம் ஈத் கமிட்டி சார்பாகவும் mallipattinam.com சார்பாகவும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday, 27 August 2011

என்ன அழகு எத்தனை அழகு

நமதூர் மினார் &  பள்ளிவாசல்  ஜொலிக்கும் காட்சி.    பள்ளிவாசலின் அழகை   பார்க்க           ரசிக்க



Wednesday, 10 August 2011

அழகிய தோற்றம்

மினாரின் உச்சியிலிருந்து எடுத்த படம்






Tuesday, 9 August 2011

மினார் டூம் வர்ணம் பூசுதல்


மினாருக்கு பெய்ன்ட் அடிக்கும் காட்சி.





Saturday, 6 August 2011

மினார் வர்ணம் பூசுதல்

நமது பள்ளிவாசலின் மினாருக்கு வர்ணம் பூசுதல் வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்றிருக்கிறது




.பள்ளிவாசலின் உள்ளே தொங்கிக்கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வயர்கள் வெளியே தெரியா வண்ணம் பீடிங் மூலமாக மறைத்து அழகு படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சி.

Thursday, 4 August 2011

பணிகள் மும்முரம்

ஜும்மா பள்ளிவாசலில்  அனைத்துவகையான பராமரிப்பு வேலைகளும் (MAINTANANCE WORK)  நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

PAINTING

WIRING

பெண்களுக்கான தராவீஹ் கீற்றுகொட்டகையை தகர ஷெட் ஆக மாற்றியது  

இன்னும் ஏராளமான சிறு சிறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.




பள்ளிவாசலுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி  மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  

நிர்வாகிகள் தேர்வு

கடந்த 01/08/2011திங்கள் கிழமை வக்பு போர்ட் சூப்பிரண்ட் தலைமையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பு கூட்டத்தில்   தேர்தலில் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஏகமனதாக கீழ்க்கண்ட நபர்களை தேர்ந்தெடுத்தனர்

  தலைவர்;                       வா.முகம்மது ரபீக்

 செயலாளர்;                     H.ஷேக் அப்துல்லாஹ்

துணை தலைவர்;         A.  சரபுதீன்

பொருளாளர் ;                  A. நிஜாமுதீன்

மீதமுள்ள அனைவரும்  உறுப்பினராக தொடர்வது என்றும்  ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.

  இதற்க்கு முன்பு இருந்த ஜமாத் நிர்வாக வரவு செலவு கணக்குகள் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி (அடுத்த மாதம்)க்குள் ஒப்படைப்பது  என்ற  முன்னாள் ஜமாத் நிர்வாகிகளின் வேண்டுகோளையும்   ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Monday, 25 July 2011

தீவிர ஆலோசனை

தேர்தல் வெற்றிக்குப்பின்
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தீவிர ஆலோசனை நடைபெற்றது.





Thursday, 21 July 2011

ஜமாத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

நமதூரில் நாளை மறுநாள்(23/07/2011) நடக்க இருக்கும் ஜமாத்தேர்தலின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது . அதன் விபரம் பின் வருமாறு





Tuesday, 12 July 2011

தேர்தல் நடப்பது உறுதி

    நேற்று (11/07/2011) திங்கள் கிழமை  வேட்புமனு வாபஸ் வாங்கும் கடைசி தினம் என்பதால்  - பழைய நிர்வாகிகள் அனைவரும் வாபஸ் வாங்கிவிடுவார்கள் , தேர்தல் இல்லாமல் புது நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துதுவிடலாம் என்ற ஆசை    ஊர் மக்களிடம் பரவலாக காணப்பட்டது.   ஆனால் நான்கு பேர்கள் மட்டுமே வாபஸ் வாங்கி உள்ள நிலையில் தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது.

வாபஸ் வாங்கியவர்கள் விபரம்.

Monday, 4 July 2011

நாமினேஷன் தாக்கல்


             தேர்தல் இல்லாமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து விடலாம்,    ஊரில் சண்டை சச்சரவுகளை தவிர்த்து ஜமாத் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து விடலாம்    என்ற பலரின் ஆசை தோற்றுப்போனது.

       இறுதிக்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின .சமாதான முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்ட நிலையில் வேறு வழி இல்லாததால் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்று நாமினேஷன் தாக்கல் செய்தவர்களின் பட்டியல்  விபரம்



Saturday, 2 July 2011

ஒருங்கிணைப்பு முயற்சி


நமதூரில் இன்று 02/07/2011 சனிக்கிழமை  அசருக்குப் பிறகு நடைபெற்ற  ஊர் பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
 
1. ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு   இந்த முறை வாய்ப்பு இல்லை .

2. தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை தவிர்ப்பது.  தேர்தல்  நடத்தினால் குரோதங்களும்  விரோதங்களும் அதிகமாகுமே தவிர ஊர் ஒன்று பட்டு இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்திற்காகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

குறிப்பு; .இந்த கூட்டத்திற்கு முன்னாள் நிர்வாகிகள் M.K.M  ஜைனுலாபுதீன் , ரஷீத்   இவர்களை தவிர  மற்ற நிர்வாகிகள்  யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமாத் நிர்வாக தேர்தல் அறிவிப்பு

                                            
ஜமாத்  நிர்வாக தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு

Monday, 27 June 2011

டோன்ட் ஒர்ரி


அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை நன்மையின் பக்கம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் அறிய செய்ய வேண்டும் .

சார்  எனக்கு  இங்கிலீஷ் படிக்க தெரியும்   ஆனா அதோட அர்த்தம்  முழுசா எனக்கு  தெரியாது  சார்

இனி கவலை வேண்டாம்

இன்று ஒரு தகவல் :
GOOGLE மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபியர்ப்பு வசதியை இன்று முதல் உலக மக்குளுக்கு அறிமுகபடுத்தி உள்ளனர்.
கீழே கொடுத்துள்ள LINK மூலம்  ஆங்கில வாசகத்தை டைப் செய்தோ ,  Cut  & Paste முறையிலோ பதிவு செய்தால் , தமிழாக்கம் செய்த வாசகம் நமக்கு கிடைக்கும் !
நிச்சயம் இது ஒரு நமக்கு கிடைத்த அற்புதமே ! 
http://translate.google.co.in/?ie=UTF-8&hl=en&tab=wT#en|ta|                 இச்செய்தி நம் வாசகர்களுக்கு 

மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்று  நினைக்கிறேன் .

இது  கூகிளின்  முதல் வெர்ஷன்      மேலும்  இது டெவலப் செய்யப்பட்டு   இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூகிள் செய்தி கூறுகின்றது.
      

Monday, 20 June 2011

செல்போன்


கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Monday, 13 June 2011

லாரி கவிழ்ந்து விபத்து

நேற்று 14/06/2011 திங்கள் கிழமை மாலை சுமார்  4 மணியளவில் மல்லிபட்டினம்  பஸ் ஸ்டாப்பில்  ஹலால் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே    E.C.R ரோட்டில் சிமென்ட் மூட்டை  ஏற்றிக்கொண்டு அதிரை வழியாக  செல்வதற்காக வந்த லாரி இரண்டாம்புளிக்காடு வழியாக வந்து விருட்டென்று E.C.R  ரோட்டில் ஏறிய பஸ் மீது மோதாமல் இருக்க லாரி திடீரென்று வளைத்ததில்  லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


எப்போதும் அந்த இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்   நல்லவேளையாக விபத்து நடந்த நேரத்தில் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால்    இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை .